பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 பெரிய புராண விளக்கம்- 6

கரசு நாயனாரை, "இன்றைக்கு உம்மை. எங்களுடைய பல்லவ மன்னன் கூட்டிக் கொண்டுவரும் பொருட்டு எங்களை அனுப்பினான்; வருவீராக’ என்று கூறி, நின்று கொண்டிருந்த அந்த அமைச்சர்களைத் திருநாவுக்கரசு நாய னார் நேரில் பார்த்து நிறைந்த தவத்தைப் புரிந்தவராகிய அவர் திருவாய் மலர்ந்தருளிச் செய்வாரானார். பாடல் வருமாது: - சென்றணைந்த அமைச்சருடன் சேனைவீ ரரும்சூழ்ந்து மின்தயங்கு புரிவேணி

வேதியனார் அடியவரை 'இன்றுதுமை அரசன்அழைக்

கெமைவிடுத்தான்: போதும் என நின்றவரை நேர்கோக்கி -

நிறைதவத்தோர் உரைசெய்வார்.’’ இசன்று - திருவதிகை வீரட்டாணத்திற்குப் போய். அனைந்த-சேர்ந்த அமைச்சருடன்-அந்தப் பல்லவ மன்ன னுடைய மந்திரிகளோடு ஒருமை பன்மை மயக்கம். சேனை -படையில் உள்ள. வீரரும்-வீரர்களாகிய காலாட்களும்; ஒருமை பன்மை மயக்கம். சூழ்ந்து-சுற்றிக்கொண்டு. மின்மின்னலைப் போல. தயங்கு-விளங்கும். புரி-புரிகளைப் பெற்ற: ஒருமை பன்மை மயக்கம். வேணி-சடாபாரத் தைத் தம்முடைய தலையின்மேற் பெற்ற. வேதியனார். அந்தணராகிய விரட்டானேசுவரருடைய அடியவரைஅடியவராகிய அந்தத் திருநாவுக்கரசு நாயனாரை. இன்று .இன்றைக்கு. தும்ை-உம்மை; இடைக்குறை. அரசன்எங்களுடைய மன்னனாகிய பல்லவன். அழைக்க-கூட்டிக் கொண்டு வருமாறு. எம்ை.எங்களை; இடைக்குறை. அழைக்கெமை-அமைக்க எமை, தொகுத்தல் விகாரம். விடுத்தான்-அனுப்பினான், போதும்-நீர் வருவீராக. என