பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் 153

என்று கூறி, இடைக்குறை. நின்றவரை-நின்று கொண் டிருந்தவர்களாகிய அமைச்சர்களை; ஒருமை பன்மை மயக்கம். நேர்-நேரில், நோக்கி-பார்த்து. நிறை-நிறைந்த, தவத்தோர்-தவத்தைப் புரிந்தவராகிய அந்தத் திருநாவுக் கரசு நாயனார். உரை செய்வார்-பின் வருமாறு திருவாய் மலர்ந்தருளிச் செய்வாரானார். #

ஆடுத்து வரும் 93-ஆம் கவியின் கருத்து வருமாறு: - நா மார்ச் கும் குடியல் லோம்' என்று தொடங்கி இருக்கு வேதம், யஜுர் வேதம், சாம வேதம், அதர்வன வேதம் என்னும் நான்கு வேதங்களினுடைய தலைவனை கங்கையாற்றோடு குளிர்ச்சியைப் பெற்ற பிறைச் சந்திரன் தங்கும் சடாபாரத்தைத் தன்னுடைய தலையின் மேற் பெற்றவனாகிய வீரட்டானேசுவரனைத் தேன் நிரம்பிய 'மலர் மாலையாகிய செந்தமிழ் மொழியில் அமைந்த சொற். சுவை, பொருட் சுவை என்னும் செழுமை பொருந்திய ஒரு திருத்தாண்டகத்தை அந்தத் திருநாவுக்கரசு நாயனார் பாடியருளி, நீங்கள் கூறுமாறு என்னை அழைத்துக் கொண்டு பல்லவ மன்னனிடம் செல்லும் அடைவை நாம் பெற்றிலோம்; எம்மால் அங்கே வர டிமுடியாது’’ என்று அந்த நாயனார் திருவாய் மலர்ந்தருளிச் செய்தார்.” .பாடல் வருமாறு: . -

" நாமார்க்கும் குடியல்லோம்'

என்றெடுத்து நான்மறையின் கோமானை நதியினுடன்

குளிர்மதி வாழ்சடையானைத் தேமாலைச் செந்தமிழின்

செழுந்திருத்தாண் டகம்பாடி ஆமாறு நீர்அழைக்கும் - அடைவிலம் என் றருள்செய்தார் * . . . . *.

நாமார்க்கும் குடியல்லோம்: என்று-நா.மார்க்கும்குடியல் - லோம் என. எடுத்து-தொடங்கி. நான்மற்ைபின்-இருக்கு

  1. p 4.