பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் I67

பெற்று அந்தச் சுண்ணாம்புக் காளவாயில் அமர்ந்திருந்தவ

ராகிய அந்த நாயனாரைப் பார்த் து, சிறிதுகூட

இவருடைய உடம்பில் குறைவு தங்கவில்லையாகும்; இது என்ன வியப்பான செயல்?” என்று அந்தச் சமணர்கள் கூறி.

னார்கள்." பாடல் வருமாறு:

ஆனந்த வெள்ளத்தின் -

இடைமூழ்கி அம்பலவர்

தேனுந்து மலர்ப்பாதத்

தமுதுண்டு தெளிவெய்தி

ஊனந்தான் இலராகி

உவந்திருந்தார் தமைக்கண்டே

'ஈனம்தங் கியதிலதாம்'

என்ன அதிசயம்!’ என்றார்.’’

ஆனந்த வெள்ளத்தின் இடை-அவ்வாறு அந்தச் சமணர்கள் அந்தச் சுண்ணாம்புக் காளவாயைத் திறந்து,

பார்த்தபோது திருநாவுக்கரசு நாயனார் பேரானந்த வெள் ளத்தில். மூழ்கி-முழுகி. அம்பலவர்-சிதம்பரத்தில் உள்ள ஆலயத்தில் விளங்கும் திருச்சிற்றம்பலத்தில் திருநடனம் புரிந்தருளும் பொன்னம்பலவாணருடைய, தேன் உந்துதேன் வழியும். மலர்.செந்தாமரை மலர்களைப் போன்ற; ஒருமை பன்மை மயக்கம். ப்:சந்தி. பாதத்து-திருவடிக ளாகிய, ஒருமை பன்மை மயக்கம். அமுது-அமுதத்தை. உண்டு-குடித்துவிட்டு. தெளிவு-ப்ாதொரு மயக்கமும் இல்

லாமல் தெளிவை. எய்தி-அடைந்து. ஊனந்தான்-ஏந்த விதமான குறைபாடும்; அசை நிலை. இவராகி-இல்ல்ாத

வராகி, இடைக்குறை. உவந்து-மகிழ்ச்சியை அம்ைந்து.

இருந்தார். தமை-அந்தச் சுண்ணாம்புக் காளவாயில் அமர்ந்

திருந்த அந்த நாயனாரை. தமை: இடைக்குறை. தம்:

அசை நிலை. கண்டு-பார்த்துவிட்டு. ஏ:அசை நிலை.

ஈனம்-சிறிதுகூட இவருடைய உடம்பில் குறைவு. தங்கியது

தங்கியிருப்பது. இலதாம்-இல்லாததாகும்; இடைக்குறை