பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

fé? பெரிய புராண விளக்கம்-3

என்ன-இது எத்தகைய. அதிசயம்-வியப்பான செயல். என்றார்-என்று அந்தச் சமணர்கள் கூறினார்கள்; ஒருமை பன்மை மயக்கம். -

அடுத்துவரும் 102-ஆம் கவியின் கருத்து வருமாறு:

இது வியப்பு அல்ல; அந்தத் தருமசேனர் முன்பு தான் சேர்ந்திருந்த சமணசமயத்தில் புரிந்த சாதனையினால் இந்த மந்திரங்களை ஓதி உயிர் போகாமல் பிழைத்து இந்தச் சுண்ணாம்புக் காளவாயில் அமர்ந்திருந்தார்." என்று அந்தச் சமணர்கள் தங்களுடைய மன்னனாகிய பல்லவ ஆறுக்குக் கூறிவிட்டு, நம்முடைய அறிவினால் ஆராய்ந்து பார்த்து இனிமேல் இந்தத் தருமசேனருக்கு வன்மையான பாம்பினுடைய தஞ்சை உண்ணுமாறு செய்வதே' என முதிர்ச்சியைப் பெற்றுத் தங்களுடைய வாழ்க்கையை நடத்திவரும் பாதகச் செயல்களைச் செய்பவர்களாகிய அத்தச் சமணர்கள் தங்களுடைய துர்நாற்றம் அடிக்கும் வாய்களால் கூறினார்கள். பாடல் வருமாறு: * அதிசயம்அன் றிது:முன்னை

அமணசமயச் சாதகத்தால் இதுசெய்து பிழைத்திருந்தான்

எனவேந்தற் குரைசெய்து, "மதிசெய்வ திணிக்கொடிய

வல்விடம்கட் டுவதென்று முதிரவரும் பாதகத்தோர் . ‘. . . . முடைவாயால் மொழிந்தார்கள். இது-இவ்வாறு தருமசேனன் உயிரோடு இருப்பதாகிய இந்தச் செயல். அதிசயம்-வியப்பு. அள் று-அல்ல.முன்னைஇந்தத் தருமசேனன் முன்பு தான் சேர்ந்திருந்த அமணசமண.சமய-சமயத்தில் புரிந்த. ச்:சந்தி. சாதகத்தால்-மந்திர சாதனையினால்.இது-இந்த மந்திரங்களை, ஒருமை பன்மை மயக்கம். செய்து-உச்சரித்தலைப்புரிந்துகொண்டு.பிழைத்துதன்னுடைய உயிர் போகாமல் பிழைத்து. இருந்தான்