பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் ான்

இந்தச் சுண்ணாம்புக் காளவாயில் அமர்ந்திருந்தான். எனஎன்று; இடைக்குறை. வேந்தற்கு-தங்களுடைய அரச னாகிய பல்லவனிடம்; உருபு மயக்கம். உரை செப்து-கூறி விட்டு, மதி-நம்முடைய அறிவாற்றலினால் ஆராய்ந்து. செய்வது.செய்ய வேண்டிய செயல். இனி-இனிமேல். க்:சந்தி. கொடிய-கொடுமையாக உள்ள. வல். வலிமை யைப் பெற்ற; என்றது கொல்லும் வவிமையைப் பெற்ற’ என்றபடி விடம்-பாம்பினுடைய நஞ்சை ஊட்டுவதுகுடிக்குமாறு செய்வதே. என்று-என. முதிரவரும் பாதகத் தோர்-பாதகமான செயல்களைச் செய்து அவற்றில் முதிர்ச்சி யைப் பெற்றுத் தங்களுடைய வாழ்க்கையை நடத்திக் கொண்டுவரும் அந்தப் பாதகர்களாகிய சமணர்கள்: ஒரும்ை பன்மை மயக்கம். முடை-துர்நாற்றம் வீசும். வாயால்தங்களுடைய வாய்களால்; ஒருமை பன்மை மயக்கம். மொழிந்தார்கள்-அந்தப் பல்லவ மன்னனிடம் கூறினார்கள். அடுத்து வரும் 103-ஆம் கவியின் கருத்து வருமாறு: அவ்வாறு அந்தப் பாதகர்களாகிய சமணர்கள் கூறிய அந்த வார்த்தைகளைக் கேட்டவுடன் கொடுமையாகிய சமணர்களுடைய சார்பினால் கெடும் அந்தப் பல்லவ வேந் தன் ஓங்கி எழும் பெரிய மயக்கத்தால், அந்தத் தரும சேனனுக்குப் பாம்பின் விடத்தை அளித்துக் குடிக்கச் செய் விர்களாக." என்று அந்தச் சமணர்களிடம் கூறச் சற்றும் தயங்காதவர்களாகிய அந்தச் சமணர்கள் திருநாவுக்கரசு நாயனாரை அந்தக் கொடிய நஞ்சினுடைய இயல்பைப் பெற்ற பாற்சோற்றை அமுது செய்யுமாறு புரிந்தார்கள்." பாடல் வருமாறு: - -

ஆங்கதுகேட் டலும்கொடிய

அமண்சார்பால் கெடுமன்னன் ஓங்குபெரு மையலினால், -

கஞ்சூட்டும் எனஉரைப்பத்