பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் ፲፱9r

எடுத்துக் கீழே மோதி உடைத்துவிட்டு, தன்னுடைய கால் களை எடுத்து வைத்ததனால் குத்துக்கோற்காரர்களி: னுடைய தலைகளை உதைத்துவிட்டுக் கன்ன மதம், கபோல, மதம், பீஜ மதம் என்னும் மூன்று மதங்களை ஒழுகவிடும் , 'ஆண் யானையினுடைய வேடத்தோடு வரும் யமனைக் காட்டிலும் மிகுதியாக உள்ள ஆற்றலைப் பெற்ற வெற்றி. யைக் கொண்ட அந்தப் பட்டத்து யானை. பாடல் வருமாறு:

' கூடத்தைக் குத்திஒரு

குன்றமெனப் புறப்பட்டு மாடத்தை மறித்திட்டு

மண்டபங்கள் எடுத்தெற்றித் தாடத்திற் பரிக்காரர்

தலைஇடறிக் கடக்களிற்றின் வேடத்தால் வரும்கூற்றின்

மிக்கதொரு விறல்வேழம். ' இந்தப் பாடல் குளகம். கூடத்தை-தன்னைக் கட்டி யிருந்த கொட்டிலை. க்:சந்தி. குத்தி-தன்னுடைய தந்தங் களால் குத்தி எறிந்துவிட்டு. ஒரு குன்றம்-ஒரு மலை. எனஎன்று கூறுமாறு; இடைக்குறை. ப்:சந்தி. புறப்பட்டு. அந்தக் கொட்டிவிலிருந்து வெளியில் ஒடி வந்து. மாடத்தை அந்த வீதியில் உயரமாக நின்ற மாடத்தை. மறித்தட்டு. தள்ளிவிட்டு. மண் டபங்கள்-அந்த வீதியில் உயரமாக நின்ற மண்டபங்களை. எடுத்து-தன்னுடைய து தி க் கை யால் எடுத்து. எற்றி-கீழே மோதி உ ைடத் து. த்:சந்தி. д. п. ட த் தி ல்- த ன் னுடைய கால்களை எடுத்து வைத்ததனால், உருபு ம ய க்கம். பரிக்காரர்-குத்துக் கோ ற் காரர்க ளி னு ைட ய; ஒருமை பன்மை மயக்கம். தலை-தலைகளை; ஒருமை பன்மை மயக்கம். இடறி-உதைத்துவிட்டு. க்சந்தி, கட-கன்ன் மதம், கபோல, மதம், பீஜ மதம் என்னும் மூன்று மதங்களை ஒழுகவிடும்: