பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேசிய புராண விளக்கம்- 8

-ஒருமை பன்மை மயக்கம். க்:சந்தி. களிற்றின்-ஆண்யானை வினுடைய வேடத்தால்-வேடத்தோடு; உருபு மயக்கம். வரும்-ஒடிவரும். கூற்றின்-யமனைக் காட்டிலும். மிக்கது ஒரு-மிகுதியாக உள்ள ஆற்றலைப் பெற்றதாகிய ஒரு. விறல்வெற்றியைக் கொண்ட வேழம்-பல்லவ மன்னனுடைய, அந்தப் பட்டத்து யானை, + . -

பிறகு உள்ள 111-ஆம் கவியின் கருத்து வருமாறு: "அந்தப் பட்டத்து யானை தன்னுடைய கால்களில் கட்டிய கயிறுகளும் சங்கிலியினுடைய தொடரும் அறுத்து போகுமாறு செய்து, தன்னைக் கட்டியிருந்த கட்டுத்தறியை மு. றி த் து வி ட் டு , தனக்கு மேலே சுற்றிப் பறக்கின்ற பறவைகளின் கூட்டம் அஞ்சுமாறு அந்தக் கட்டுத் தறியி னுடைய துண்டங்களைத் தன்னுடைய கால்களால் தள்ளி விலக்கிவிட்டு ஊஞ்சலைப் போல ஆடும் தன்னுடைய துதிக்கை எதிரில் சுற்றி வர மிகுதியான சினத்தை மேற் கொண்டு குதிரைகளைக் கலங்குமாறு செய்து, நறுமணம் . கமழும் கன்ன மதம், கபோல மதம், பீஜ மதம் என்னும் மூன்று மதங்களும் மழை பொழிவதைப் போல தனக்கு முன்னால் பொழிய அந்த மதங்களை ஒழுகவிடும் மலையைப் போன்ற யானை திருநாவுக்கரசு நாயனாருக்கு எதிரில் ஓடி

வரும். பாடல் வருமாறு:

' பாசத்தொடை நிக றத்தொடர்

பறியத்தறி முறியா மீசுற்றிய பறவைக்குலம்

வெருவத்து னிவிலகா ஊசற்கரம் எதிர்சுற்றிட

உரறிப்பரி உழறா வாசக்கடமழைமுற்பட . . ; மதவெற்கெதிர் வருமால். ' -

"அத்தப்பட்டத்து யானை தன்னுடைய கால்களில்