பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் 181

த்:சந்தி. தொடை தொடர். நிகற-சங்கிலியினுடைய. த்:சந்தி. தொடர்-தொடரும். பறிய-அறுந்து போகுமாறு, த்:சந்தி. தறி-தன்னைக் கட்டியிருந்த கட்டுத் தறியை. முறியா-முறித்துவிட்டு, மீ-தனக்கு மேலே. சுற்றிய-சுற்றிக் கொண்டு பறந்த, பறவை-பறவைகளினுடைய ஒருமை .பன்மை மயக்கம். க்:சந்தி. குலம்-கூட்டம். வெருவஅஞ்சுமாறு. த்:சந்தி. துணி-அந்தக் கட்டுத்தறியினுடைய துண்டங்களை; ஒருமை பன்மை மயக்கம். விலகா-தன்னு டைய கால்களால் தள்ளி விலக்கிவிட்டு. ஊசல்-ஊசலைப் போல ஆடும் கரம்-தன்னுடைய துதிக்கை. எதிர்-தனக்கு எதிரில். சுற்றிட-சுற்றிவர. உரறி-மிகுதியாகிய சினத்தை மேற்கொண்டு. ப்:சந்தி. பரி-குதிரைகளை; ஒருமை பன்மை மயக்கம். உழறா-கலங்குமாறு செய்து. வாச.வேங்கை மலரைப் போல நறுமணம் கமழும். க்சந்தி. கட-கன்ன மதம், கபோல மதம், பீஜ மதம் என்னும் மூன்று மதங்கள்; ஒருமை பன்மை மயக்கம். 'விலக்கரும் கரிமதம் வேங்கை நாறுவ' என வருதலைக் காண்க. மழை-மழை பொழிவ தைப் போல, முற்பட-தனக்கு முன்னால் பொழிய, மதஅந்த மதங்களை ஒழுக விடும்; ஒருமை பன்மை மயக்கம். வெற்பு-மலையைப் போன்ற யானை, உவம ஆகுபெயர். எதிர்-திருநாவுக்கரசு நாயனாருக்கு எதிரில், வரும்-ஓடிவரும், ஆல்:ஈற்றசை நிலை.

பிறகு உள்ள 112-ஆம் கவியின் கருத்து வருமாறு: அவ்வாறு ஓடி வந்த அந்த ஆண் யானை ஆகாயத்தில் இடி உண்டாகி எழும் ஒலியைப் போலத் திக்கு யானைகள் அச்சத்தை அடையுமாறு தன்னுடைய அடிகளின் கீழ் தரை புகுந்து நெளிந்திருக்கத் தான் ஒடி வரும் காற்றினுடைய தடையைப் போன்ற நடையினுடைய வேகத்தினால் விரை வில் அடைந்து பக்கத்தில் உள்ள மக்களை மோதி அடிக்கும்

தி-12 - -