பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 பெரிய புராண விளக்கம்-6

செயலினால் கிளர்ச்சியைப் பெற்று எழும் சமுத்திரத்தில் எல்லாப் பொருள்களும் விழும் கடையுகத்தினுடைய இறுதி யைப் போல ஊழித்தீ என்று கூறுமாறு முன்னால் கோபம் முடுகி மூண்டு அந்த யானை வேகமாகத் திருநாவுக் கரக நாயனாரை நோக்கி ஓடிவந்தது. பாடல் வருமாறு:

இடியுற்றெழும் ஒலியில்திசை

இபம் உட்கிட அடியில் படிபுக்குற கெனியப்படர்

பவனக்கதி விசையில் கடிதுற்றடு செயலிற்கிளர் கடலிற்படு கடையின் முடிவிற்கனல் எனமுற்சினம் முடுகிக்கடு கியதே.' இடி-அவ்வாறு ஓடி வந்த அந்த ஆண் யானை ஆகாயத். தில் இடி. உற்று-உண்டாகி. எழும் ஒலியில்-எழும் சத்தத் தைப் போல. திசை.கிழக்கு, மேற்கு வடக்கு, தெற்கு, வட கிழக்கு, வட மேற்கு, தென்கிழக்கு. தென் மேற்கு என்ற எட்டுத் திசைகளிலும் நிற்கும்; ஒருமை பன்மை மயக்கம், இபம்-யானைகள்: ஒருமை பன்மை மயக்கம். ساقینامه அச்சத்தை அடையுமாறு. அடியில்-தன்னுடைய அடிகளின் கீழ் ஒருமை பன்மை மயக்கம். படி-தரையில் உள்ள ம்ண்: ஆகுபெயர். புக்குற-புகுந்தமையால், நெளிய-அந்த யானை வளை. ப்:சந்தி. படர்-தான் ஓடி வரும். பவன-பிரசண் டக் காற்றினுடைய நடையை போன்ற க்:சந்தி கதி. நடையினுடைய விசையில் வேகத்தினால், உருபு மயக்கம், கடிது-விரைவில் ஒடி உற்று-சென்று. அடு-பக்கத்தில் நிற். கும் மக்களை மே தி அடிக்கும். செயலில்-செயலினால்; உருபு மயக்கம். கிளர்-கிளர்ச்சியைப் பெற்று எழு ம். கடலில்-சமுத்திரத்தில். படு-எல்லாப் பொருள்களும் விழும். கடையின்-கடையுகத்தினுடைய முடிவி ல்-இறு தி யைப் போல. கனல்-ஊழித் தீ. என-என்று கூறுமாறு இடைக்