பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 பெரிய புராண விளக்கம்-6

நிறையாற்று நீர்க்கொழுந்து

படர்ந்தேறு நிலைமையதால்.’

நறை-நறுமணத்தை. ஆற்றும்-கமழுமாறு புரியும். கமுக -பாக்கு மரங்களினுடைய, ஒருமை பன்மை மயக்கம். நவ மணி-மாணிக்கம், மரகதம், பவளம், முத்து, புட்பராகம், பதுமராகம், வஜ்ரம், வைடுரியம், கோமேதகம் என்னும் ஒன்பது இரத்தினங்களைப் போன்ற, மணி: ஒருமை பன்மை மயக்கம்.க்:சந்தி, கழுத்தினுடன்-கழுத்துக்களோடு; ஒருமை பன்மை மயக்கம். கூந்தல்-கூந்தல்களைப் பெற்ற; ஒருமை பன்மை மயக்கம். பொறை-பாரத்தை. ஆற்றா-சுமக்க முடியாத, மகளிர்-பெண்மணிகள். என-என்று கூறுமாறு: இடைக்குறை. ப்:சந்தி. புறம்பு-திருவாய்மூரினுடைய. வெளியிடங்களில்; ஒருமை பன்மை மயக்கம். அலை-அசை கின்ற. தண்டலை-பல வகையான மரங்கள் வளர்ந்து நிற்கும் குளிர்ச்சியைப் பெற்ற பூம்பொழிலை. அந்த மரங்களாவன, தேக்கு மரம், வாகை மரம், வேங்கை மரம். பல வகையாகிய, வாழை மரங்கள், .ெ த ன் ன ம ர ம் , பன மரம், அரசமரம், ஆல மரம், மா மரம், பலா மரம், கடப்ப மரம் புளிய மரம், கொளிஞ்சி மரம், நாரத்தை மரம், வில்வ மரம், விளா மரம், பூவரச மரம், துணா மரம், வேப்ப மரம், நெட்டிலிங்க மரம், அசோக மரம், பவள மல்லிகை மரம், மகிழ மரம் முதலியவை. வேலி-வேலியாகப் பெற்ற. த்:சந்தி துறை ஆற்ற-தென் பெண்ணை ஆற்றினுடைய துறைகளில்: ஒருமை பன்மை மயக்கம்.மணி-நீல மணியைப் போன்ற. வண்ண-நீல நிறத்தைக்கொண்ட ச்சந்தி. சுரும்பு-வண்டு. கள்; ஒருமை பன்மை மயக்கம். இரைக்கும்.-ரீங்காரம் செய் யும். பெரும்-பெரியவையாக உயர்ந்து நிற்கும். பெண்ணைபன மரங்கள்; ஒருமை பன்மை மயக்கம். நிறை-நிரம்பியுள்ள. ஆற்று-அந்தத் தென் பெண்ணை ஆற்றில் ஒடும். நீர்-புனலி னுடைய. க்சந்தி.கொழுந்து-கொழுந்துகள்: ஒருமை பன்மை மயக்கம். படர்ந்து-பலவகையான கொடிகள் படர்ந்து