பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் 19

y

சென்று. அந்தக் கொடிகளாவன: மிளகுக் கொடி, முல்லைக் கொடி, மல்லிகைக் கொடி, இருவாட்சிக் கொடி, அவரைக் கொடி, புடலங் கொடி, பறங்கிக் கொடி, பூசணிக் கொடி, சுரைக் கொடி முதலியவை. ஏறும்-அந்தப் பன மரங்களின் மேல் ஏறும். நிலைமையது-நிலைமையைப் பெற்றது. அந்தத் திருவாய்மூர். ஆல்: ஈற்றசை நிலை.

பிறகு உள்ள 8-ஆம் பாடலின் கருத்து வருமாறு: "நறுமணம் கமழும் பல வகையான மலர்கள், மிதக்கும் பெரிய சமுத்திரத்தில் படியும் நீல உருவங்களைப் பெற்ற மேகங்கள் என்று கூறுமாறு மிகுதியாகச் சென்று துள்ளிக் குதித்த கருமை நிறத்தைப் பெற்ற எருமை மாடுகளினுடைய கன்றுக் குட்டிகளைப் போல, கரிய உடம்புகளையும் சிவந்த கண்களையும் பெற்ற வரால் மீன்கள் தங்களுடைய மடிகளை முட்ட அந்த மடிகளில் உள்ள முலைகளிலிருந்து பாலை மழையைப் போலப் பொழியும் கருமையான நிறத்தைப் பெற்ற எருமை மாடுகளைச் சுமந்துகொண்டு கரைகள் புரள்பவையாகிய அலைகளை வீசும் வாவிகள் அந்தத் திரு வாய்மூரில் இருக்கும். பாடல் வருமாறு:

  • மருமேவு மலர்மேய மாகடலி னுட்படியும்

உருமேகம் எனமண்டி உகைத்தகரும் கன்றுபோல் வருமேனிச் செங்கண்வரால் மடிமுட்டப் பால்சொரியும் கருமேதி தனைக்கொண்டு கரைபுரள்வதிரைவாவி, மரு-நறுமணம். மேவும்-கமழும். மலர்-பல வகையாகிய மலர்கள்; ஒருமை பன்மை மயக்கம். அந்த மலர்களாவன: செந்தாமரை மலர், வெண்டாமரை மலர், நீலோற்பல மலர், கு மு. த ம ல ர் , ஆம்பல் மலர், அ ல் லி மலர் , மகிழ மல்ர், பவளமல்லிகை மலர், மல்லிகை மலர், முல்லை மலர். இருவாட்சி மலர், பூவரச மலர், வில்வ மலர், தும்பை மலர், நுணா மலர், வேங்கை மலர், வாதை மலர், செவ் வரளி மலர். வெள்ளையரளி மலர், மஞ்சட்செவ்வந்தி மலர், வெள்ளைச் செவ்வந்தி மலர், மாமலர், கடம்ப மலர் முதலி