பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் . 195.

யானையின் கையிற் பிழைத்த

வினை அமண் கையர்கள் எல்லாம் மானம் அழிந்து மயங்கி

வருந்திய சிந்தைய ராகித் தானை நிலமன்னன் தாளில்

தனித்தனி வீழ்ந்து புலம்ப மேன்மை நெறிவிட்ட வேந்தன்

வெகுண், "டினிச் செய்வதென்' என்றான்.” யானையின் அந்த ஆண்யானையினுடைய கையில்துதிக்கைக்கு அகப்படாமல்; உருபு மயக்கம். பிழைத்ததங்களுடைய உயிர்கள் போகாமல் பிழைத்த வினைபாவங்களைப் புரிந்த ஒருமை பன்மை LELääಯ. அமண்சமணர்களாகிய, திணை மயக்கம், கையர்கள் - இழிந்த வர்கள். எல்லாம்-எ லாரும். மானம்-தங்களுடைய மரி யாதை. அழிந்து-அழியுமாறு செய்து. மயங்கி-மயச்கத்தை அடைந்து. வருந்திய-வருத்தத்தைக் கொண்ட சிந்தையர் ஆகி-உள்ளங்களை உடையவ ர்களாகி; ஒ ரு ைம பன்மை ,யக்கம். த:சந்தி. தானை-தேர், யானை. குதிரை, காலாட்கள் என்னும் சதுரங்கங்களை உடைய சேனையைப் s பெற்ற, நில-தொண்டை மண்டலத்தை ஆட்சிபுரியும். மன்னன்-பல்லவ அரசனுடைய. தாளில்-திருவடிகளில்; ஒருமை பன்மை மயக்சம். தனித்தனி-தனித்தனியாக வேறு வேறாக விந்து-விழுந்த வணங்கி, புலம்ப-அது அரற்ற. மேன்மை-மேம் பாடாகிய தன் மை யை ப் பெற்ற, நெறி-சைவ சமயமாகிய வழியை. விட்ட-விட்டு விட்ட. வந்தன்-அந்தப் பல்லவ மன்னன். வெகுண்டு-சினம் மூண்டு. இனி-இனிமேல். ச்சந்தி. செய்வது-நாம் புரியும் செயல் என்-ன்ைன இருக்கிறது. என்றான்-என்று அந்தச் சமணர்களைப் பார்த்துக் கேட்டான். . -

அடுத்து உள்ள 121-ஆம் கவியின் கருத்து வருமாறு:

நம்முடைய சமண சமயத்தில் இருந்து கொண்டே