பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

sig6 பெரிய புராண விளக்கம்-6

தான் விரும்பிய பாம்பின் நஞ்சு, நோய்கள் முதலியவற்றை மந்திரங்களைக் கூறித் தடுக்கும் நிலையினால் எங்களுக்கு எதிரில் அவன் மேல் ஏறுதலை அழியுமாறு அந்த ஆண் யானையினால் இவ்வாறு உன்னுடைய சீர்த்தியைக் குறைவு படுத்திய அந்தத் தருமசேனன் உயிரை இழந்து போனால் தான் நமக்கு வந்திருக்கும் அவமானம் நினக்குப் பொங்கி எழும் நெருப்பு மேலே செல்ல அதற்குப் பிறகு புகை போனாற் போலப் போய்விடும்' என்று அந்தச் சமணர்கள் கூறினார்கள். பாடல் வருமாறு: .

நங்கள் சமயத்தில் கின்றே

நாடிய முட்டி நிலையால் எங்கள் எதிரே றழிய

யானையால் இவ்வண்ணம் நின்சீர் பங்கப் படுத்தவன் போகம்

பரிபவம் தீரும் உனக்குப் பொங்கழல் போக அதன்பின்

புகைஅகன் றாலென, என்றார். ' - நங்கள்-நம்முடைய, சமயத்தில்-சமண சமயத்தில். நின்றே-இருந்து கொண்டே நாடிய-தான் விரும்பிய. முட்டி-பாம்பின் நஞ்சு நோய்கள் முதலியவற்றை மந்திரங். களைக் கூறித் தடுப்பதாகிய, நிலையில்-நிலைமையினால், எங்கள்-எங்களுக்கு. எதிர்-எதிரில், ஏறு-அவன்மேல் ஏறு தலை. அழிய-போகுமாறு. யானையால்-நாம் அனுப்பிய அந்த ஆண் யானையினால், இவ்வண்ணம்-இவ்வாறு. நின். உன்னுடைய. சீர்-சீர்த்தியை. பங்கப்படுத்தவன்-குறைவு படுத்திய அந்தத் தருமசேனன். போக-தன்னுடைய உயிரை இழந்து இறந்து போனால்தான். ப்.சந்தி. பரிபவம்-நமக்கு உண்டாகியிருக்கும் அவமானம். பொங்கு-பொங்கி எழும். அழல்-நெருப்பு. போக-மேலே செல்ல, அதன்பின்-அந்த நெருப்புக்குப் பிறகு, புகை அகன்றால் என-புகைபோனாற் போல. என:இடைக்குறை. உனக்கு-நினக்கு. தீ கு ம்