பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் ; ; 209.

அந்த அழகிய சிவத்தலமாகிய திருப்பாதிரிப்புலியூரில் உள்ள கடற்கரையை அடைந்த பக்தராகிய திருநாவுக்கரசு நாயனாரை உண்மையாகிய தவத்தைப் புரிந்த தவசிகளி னுடைய கூட்டம் எல்லாம் அந்தக் கடற்கரைக்கு வந்து ஆர வாரம் செய்து கொண்டு எழுந்து நிற்க, எந்தத் திசைகளி லும் ஹா, ஹா' என்னும் ஒலியைப் போல கொந்தளிக்கும் நீர் நிரம்பிய பெரியதாக இருக்கும் அந்தச் சமுத்திரமும் பேரோசையை எழுப்பியது. பாடல் வருமாறு: * .

"அத்திருப் பதியினில் அணைந்த அன்பரை மெய்த்தவக் குழாமெலாம் மேவிஆர்த்தெழ எத்திசை யினும்அர என்னும் ஓசைபோல் தத்துநீர்ப் பெருங்கடல் தானும் ஆர்த்ததே." அத்திரு-அந்த அழகிய இரு-செல்வர்கள் வாழும்" எனலும் ஆம். ப்:சந்தி. பதியினில்-சிவத்தல்மாகிய திருப் பாதிரிப்புலியூரில் உள்ள கடற்கரையை இடஆகு பெயர்: உருபு மயக்கம். அனைத்த-அடைந்த். அன் பரை-பக் த ராகிய திருநாவுக்கரசு நாயனாரை. மெய்-உண்மையாகிய. த்:சந்தி. தவக்குழாம்-த்வத்தைப் புரிந்த தவசிகளினுடைய கூட்டம். எலாம்-யாவும் இடைக்குறை ம்ேவி அந்தக் கடற்கரைக்கு வந்து, ஆர்த்து எழி-ஆரவாரம் செய்து கொண்டு எழுத்து நிற்க். எத்திசையினும்-கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு ஆகிய எல்லாத் திசைகளிலும். திசை: ஒருமை பன்மை மயக்கம். அர-ஹர ஹர என்னும்-என்று பக்தர்கள் கூறும் ஓசை பேர்ல்-சத்தத்தைப் போல. தத்து. கொந்தளிக்கும். நீர்-புனல் திசம்பிய், ப்ர்ச்ந்தி. பெரும் பெரியதாக விளங்கும். கடல்தானும்-சமுத்திரமும், தான்: அசைநிலை, ஆர்த்தது-பேரோன்சயை எழுப்பியது. ஏ: சுற்ற்சை நிலை.

பிறகு வரும் 133-ஆம்ாடலின் கருத்து வருமாறு:

யாவரும் வணங்கும் திருதிகப் பெற்ற பெருந்தகை யாகிய திருநாவுக்கரசு தாயணாகும் அந்தத் திருப்பாதிரிப்