பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210 பெரிய புராண விளக்கம்- 6.

புலியூரில் வாழும் திருத்தோண்டர்களுக்கு முன்னால் செழிப் பைப் பெற்ற திருப்பாதிரிப்புலியூரில் திருக்கோயில் கொண்டு. எழுந்தருளியிருக்கும் பிறைச் சந்திரனுடைய வெண்மையான கொழுந்தை அணிந்திருக்கும் சடாபாரத்தைத் தம்முடைய தலையின்மேற் பெற்றவராகிய தோன்றாத் துண்ை ஈசரைத் தம்முடைய கைகளைத் தம்முடைய தலையின் மேல் வைத்துக் கூப்பிக் கும்பிட்டுவிட்டுப் பக்தி உண்டாக தரையில் விழுந்து அந்த சசரை வணங்கிப் பிறகு தரையிலிருந்து: எழுந்து நின்று கொண்டு திருவருளின் வழி விளங்குமாறு ஒரு திருப்பதிகத்தை அந்த நாயனார் பாடியருள்பவரானார்.” பாடல் வருமாறு: . . . . . .

தொழுந்தகை காவினுக்கரசும் தொண்டர்முன் செழுந்திருப் பாதிரிப் புலியூர்த் திங்கள்வெண் கொழுந்தனி சடையரைக் கும்பிட் டன்புற விழுக்தெழுக் தருள் நெறி விளங்கப் பாடுவார்.' தொழும்-யாவரும் வ ைங் கும். தகை-தகுதியைப் பெற்ற பெருந்தகையாகிய நாவினுக்கரசும்-திருநாவுக்கரசுநாயனாரும். அரசு: திணை மயக்சம். தொண்டர்-அந்தத் திருப்பாதிரிப்புலியூரில் வாழும் திருத்தொண்டர்களுக்கு; ஒருமை பன்மை மயக்சம். முன்-முனைால் செழும்-செழிப் பைப் பெற்று விளங்கும். திருப்பாதிர்ப்புலியூர்-திருப்பாதிரிப் புலியூரில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும்; ஆகு. பெயர். த்:சந்தி. திங்கள்-பிறைச்சந்திரனுடைய, வெண்வெண்மையாகிய, கொழுந்து-கொழுந்தை. அணி-அணிந் திருக்கும். சடையரை-சடாபாரத்தைத் தம்முடைய தலை யின்மேற் பெற்றவராகிய தோன்றாத் துண்ை ச ைர. க்சந்தி. கும்பிட்டு-தம்முடைய திருக்க ரங்க ைள த், தம்முடைய தலையின்மேல் வைத்துக் கூப்பி கும்பிட்டுவிட்டு. அன்பு-பக்தி. உற-உண்டாக, விழுந்து-தரையில் விழுந்து அந்த ஈசன் வண்ங்கி எழுந்து பிற்கு தரையிலிர்த்து வீழ்ந்து நின்று கொண்டு. அருள்-திருவருளினுடைய, நெறி.