பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் 215

விருப்பத்தினால், உருபு மயக்கம். அங்கு நின்று-அந்தத் திருப்பாதிரிப்புலியூரிலிருந்து. ஏகி-எழுந்தருளி. ஒன்னார்பகைவர்களாகிய தாரசாட்கன், வித்யுன்மாலி, வாணன் என்னும் மூன்று அசுரர்களுக்கு உரிய ஒருமை பன்மை மயக்கம். புரங்கள்-பறக்கும் கோட்டைகளாகிய மூன்று புரங்களை. செற்றவர்-எரித்து அழித்தவராகிய வீரட்டா னே சுவரர். வாழும்.எழுந்தருளி நித்தியவாசம் செய்து கொண்டிருக்கும். திருவதிகைப்பதி-திருவதிகை வீரட்டா ம்ை என்னும் சிவத்தலத்திற்கு. சென்று-மீண்டும் எழுந் தருளி வந்து. அடைவார்.சேர்வாரானார்.

திருப்பாதிரிப்புலியூரைப் பற்றித் திருநாவுக்கரசு நாய னார் பாடியருளியதாக இந்தப் பாடலில் குறிப்பிட்ட பல திருப்பதிகங்கள் இப்போது கிடைக்கவில்லை. ஒரு திருப் பதிகம் மாத்திரம் கிடைத் திருக்கிறது. ம்ற்றவை மறைந்தன போலும்! - பிறகு வரும் 136 ஆம் கவியின் கருத்து வருமாறு:

எல்லாத் தேவர்களுக்கும் தலைவனாகிய மாணிக்க வரதேசுவரன் திருக்கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் திரு மாணிகுழி என்னும் சிவத்தலத்துக்கும், சிவக்கொழுந் தீசர் எழுந்தருளி யிருக்கும் திருத்தினை நகருக்கும் அந்தத் திருநாவுக்கரசு நாயனார் அடைவாராய் அந்தச் சிவத் தலங்களுக்கு எழுந்தருளித் தாம் விழைந்த சொற்கள் அமைந்த மலர் மாலை யாகிய திருப் பதிகங்களைப் பாடி அருளிககொண்டு மாணிக் கரைதேசுவரரை யும், சிவக்கொழுந் தீசரையும் வணங்கிவிட்டு பலவகையான மலர்கள் மலர்ந் திருக்கும் பரங்கள் வளர்த்து நிற்கும் பூம்பொழிலில் வீசும் நறுமணம் தம்முடைய திருவடிகளில் பொருந்த, நல்ல பொருள் நிரம்பிய வார்த்தைகளுக்கு அரசராகிய திருநாவுக் கரசு நாயனார் தான் வயல்களுக்குப் பாய்ந்து பலவகை யாகிய பயிர்களை வளருமாறு செய்து அவற்றிலிருந்து கிடைக்கும் நெல் முதலியவற்றை விற்றுச் சேல்வத்தை