பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216 பெரிய புராண விளக்கம்-5

அடைந்தவர்களை உண்டாக்கும் அழகிய கெடிய நதியைத் தாண்டி அந்த நாயனார் மேலே எழுந்தருளினார். பாடல் வருமாறு: - -

தேவர் பிரான் திருமாணி குழியும் தினை நகரும்

மேவினர் சென்று விரும்பிய சொன்மலர் கொண்டி

றைஞ்சிப் பூவலர் சோலை மணமடி புல்லப் பொருள் மொழியின்

காவலர் செல்வத் திருக்கெடி லத்தைக்

கடந்த ணைந்தார். ’,

தேவர்-எல்லாத் தேவர்களுக்கும்; ஒருமை பன்மை மயக்கம். பிரான்-தலைவனாகிய மாணிக் கவரதேசுவரன் திருக்கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும். திருமாணி குழியும்-திருமாணி குழி என்னும் சிவத் தலத்திற்கும். தினை நகரும்-சிவக்கொழுந்தீசர் எழுந்தருளியிருக்கும் ஆலயம் விளங்கும் திருத்தினை நகர் என்னும் சிவத்தலத்திற்கும் மேவினர்-அந்தத் திருநாவுக்கரசு நாயனார் அடையவராகி முற்றெச்சம். சென்று-அந்தச் சிவத் தலங்களுக்கு எழுந் தருளி. விரும்பிய-தாம் விழைந்த சொல்-இனிய சொற்கள் அமைந்த, ஒருமை பன்மை மயக்கம். மலர்-மலர்மாலை யாகிய திருப்பதிகங்களை; প্তম্ভ பெயர். கொண்டு-பாடி யருளிக்கொண்டு. இறைஞ்சி - மாணிக்கவரதேசுவரரையும் சிவக் கொழுந்தீசுவரரையும் வணங்கிவிட்டு. ப்:சந்தி. பூபலவகையான மலர்கள்; ஒருமை பன்மை மயக்கம். அந்த மலர்களாவன: பூவரச மலர், மகிழ மலர், வேப்ப மலர், சரக் கொன்றை மலர், புலிநகக் கொன்றை மலர், வில்வ மலர், கடம்ப மலர், பவள் மல்லிகை மலர் முதலியவை. அவர்மலர்ந்திருக்கும். சோலை-பூஞ்சோலையில். மணம்-வீசும் நறுமணம், அடி-தம்முடைய திருவடிகளில் ஒருமை பன்மை மயக்கம். புல்ல-அவற்றை மிதித்துக்கொண்டு நடப்பதனால் பொருந்த ப்:சந்தி. பொருள்-நல்ல அர்த்தம் நிரம்பிய. மொழியின்-வார்த்தைகளுக்கு: ஒருமை பன்மை மயக்கம்.