பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

党i霸 r பெரிய புராண விளக்கம்-6

பிகை ஒப்பிலாநாயகி, தல விருட்சம் கொன்றை மரம். இந்தத்தலம் இக்காலத்தில் தீர்த்தனகிரி என்று வழங்கும். இது தானுார் என்னும் சிற்றுாருக்கு மேற்குத் திசையில் ஒரு மைல் தூரத்தில் உள்ளது.

பெரியான் என்னும் பள்ளன் தன்னுடைய நிலத்தை உழுது கொண்டிருக்கும்போது சிவக்கொழுந்தீசுவரர் ஒரு. ஜங்கமரைப் போல வேடம் பூண்டு அவனிடம் எழுந்தருளி சோற்றைக் கேட்க, அவன் தன்னுடைய ஊருக்குச் சென்று சோற்றை எடுத்துக் கொண்டு வருவதாகக் கூறிவிட்டுச் சென் றான்; அவன் திரும்பி வருவதற்குள் அந்தச் சிவக்கொழுந்தீசு வரர் அவன் உழுதிருந்த வயலில் தினைப் பயிர் விளைந்து கதிர்கள் முற்றியிருக்குமாறு புரிந்தருளி மறைந்து போனார். அந்தப் பள்ளனும் அவனுடைய மனைவியும் வந்து தினைப் பயிர்கள் விளைந்திருப்பதைக் கண்டு வியப்பை அடைந்து ஜங்கமரைப் பார்க்க முடியாமல் திகைப்பை அடைந்து நி ன் றார்கள். அப்போது சிவக்கொழுந்தீசுவரர் அவர்களுக்குத் தம்முடைய தரிசனத்தை வழங்கியருளி இடப வாகனாரூட --- ராகத் தோன்றி அவர்களைச் சிவலோக பதவியை அடையு மாறு புரிந்தருளிளார். யாவரும் வியப்பை அடையும் வண் னம் தினைப் பயிர்கள் விளைந்தமையால் இந்தச் சிவத்தலத் திற்குத் திருத்தினைநகர் என்னும் பெயர் உண்டாயிற்று. திருக்கோயிலுக்கு வடக்குத் திசையில் இருக்கும் தீர்த்தம் சாம்புவ தடாகம் என்று வழங்கும். இந்தத் தலத்தைப் பற்றிய ஒரு பாசுரம் வருமாறு:

  • வடிகொள் கண் ணிணை மடந்தையர் தம்பால்

மயில் துற்றுவஞ் சனைக்கிட மாகி முடியு மாகரு தெல்எரு தேறும்

மூர்த்தியைமுத லாயபிரானை அடிகள் என்றடி யார்தொழு தேத்தும்

அப்பன் ஒப்பிலா முலையுமை கோனைச் செடிகொள் கான்மலி திருத்தினை நகருட்

சிவக்கொழுந்தினைச் சென்றடை மனனே.