பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் 219.

பிறகு வரும் 137-ஆம் கவியின் கருத்து வருமாறு: கொடுமையாகிய செயல்களைப் புரியும் .களாகிய இழிந்தவர்கள் செய்யுமாறு புரிந்த கெட்ட துன்பங் -கள் யாவும் பயன்படாமல் அழிய அவற்ை றயெல்லாம் வென்று சமுத்திரத்தின் கரை மேல் ஏறியருளிய இனிய தமிழ் மொழியினுடைய ஈசராகிய திருநாவுக்கரசு நாயனார் தங்க ஒளுடைய ஊருக்கு எழுந்தருளி மேகங்கள் ஏறித் தவழும் மாடங்கள் உயரமாக நிற் சம் திருவதிகை வீரட்டானம் என்னும் சிவத்தலத்தில் வாழும் மக்கள் எல்லாரும் தம்முடைய செயல்களில் ஆனந்தம் பொங்கி எழ விளங்கும் ஒலியை எழுப்பும் மங்கல வாத்தியங்களை வாசித்துக் கொண்டு மங்கலகரமான வார்த்தைகளைக் கூ ற லா ஆனார்கள்.” பாடல் வருமாறு: .

வெஞ்சமண் குண்டர்கள் செய்வித்த தீய மிறைகள் எல்லாம் . எஞ்சவென் றேறிய இன்தமிழ்

ஈசர் எழுந் தருள் மஞ்சிவர் மாடத் திருவதி

கைப்பதி வாணர் எல்லாம் தம்செயல் பொங்கத் தழங்கொலி

மங்கலம் சாற்ற லுற்றார்.' வெம்-கொடுமையாகிய செயல்களைப் புரிந்து வரும். சமண்-சமணர்களாகிய திணை மயக்கம். குண்டர்கள்இழிந்தவர்கள். செய்வித்த-செய்யுமாறு புரிந்த தீய-கெட்ட மிறைகள்-துன்பங்கள். எல்லாம்-யாவும். எ ஞ் ச - ப யன் படாமல் அழிய. வென்று-அவற்றையெல்லாம் வென்று விட்டு. ஏறிய-சமுத்திரத்தின் கரையினுடைய மேலே ஏறி வந்த இன்-இனிய சுவையைப் பெற்ற. தமிழ்-செந்தமிழ் மொழியினுடைய. ஈசர்-ஈசராகிய திருநாவுக்கரசு நபயனார். எழுந்தருள தங்களுடைய ஊருக்கு எழுந்தருள, மஞ்சுமேகங்கள்: ஒருமை பன்மை மயக்கம். இவர்-ஏறித் தவழும்.

சமணர்