பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருந வக்கரசு நாயனார் புராணம் 227'

பெற்ற திருமேனியை உடைய வீரட்டானேசுவரர் எழுந் தருளியிருக்கும் ஆலயம் விளங்கும் திருவதிகை வீரட் டான த்தை அந்த நாயனார் அடைந்தார். பாடல் sì {51D Tg2 : -

- இவ்வண்ணம் போல எனைப்பல

மாக்கள் இயம்பி ஏத்த மெய்வண்ண கீற்றொளி மேவும் குழாங்கள் விரவிச் செல்ல அவ்வண்ணம் கண்ணிய அன்பரும்

வந்தெய்தி அம்பவளச் செவ்வண்ணர் கோயில் திருவீரட்

டானத்தைச் சேர்ந்தனரே. ’ இவ்வண்ணம் போல.இவ்வாறு அந்த ஆடவர்களும் பெண்மணிகளும் அந்தத் திருநாவுக்கரசு நாயனாரைத் துதித். ததைப் போல. எணைப் பல-வேறு பல ஊர்களில் வாழும். மாககள்-மக்களும். இயம்பி-அந்த நாயனாருடைய புகழைக் கூறி, ஏதத-து, திகளைக் கூற. மெய்-தம்முடைய திருமேனி முழுவதும், வண்ண-வெள்ளை நிறத்தை உடைய நீற்றுவிபூதியினுடைய. ஒளி-பிரகாசத்தை. மேவும்-அங்கே வந்து, சேர்ந்த மக்களுடைய; ஆகு பெயர். குழாங்கள்-கூட்டங் - களும். விரவி-அவரோடு கலந்துகொண்டு. ச்:சந்தி, செல்ல-போக. அவ்வண்ணம்-அவ்வாறு. நண்ணிய-எழுந் தருளிய. அன்பரும் திருவதிகை வீரட்டானேசுவரருடைய பக்தராகிய திருநாவுக்கரசு நாயனாரும். வந்து-எழுந்தருளி, வந்து. எய்தி-சேர்ந்த அம்-அழகிய, பவள-பவளத்தைப் போல. ச்:சந்தி. செவ்வண்ணர்-சிவந்த நிறத்தைப் பெற்ற திருமேனியை உடையவராகிய. கோயில்-வீரட்டானே சு. வரர் எழுந்தருளியிருக்கும் ஆலயம் விளங்கும். திருவீரட், டானத்தை-திருவதிகை வீாட்டானத்தை, ச்.சந்தி. சேர்ந். தனர்-அந்த நாயனார் அடைந்தார். ஏ:ஈற்றசை நிலை

- பிறகு உள்ள 143-ஆம் கவியின் கருத்து வருமாறு: