பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228 பெரிய புராண விளக்கம் –6

அவ்வாறு திருவதிகை விரட்டானத்திற்கு எழுந்தருளிய அந்தத் திருநாவுக்கரசு நாயனார் எல்லாத் தேவர்களுடைய தலைவனும், யாவரையும் ஆட்களாகப் பெற்ற தலைவனும் ஆகிய விரட்டானேசுவரனை அவன் எழுந்தருளியிருக்கும் திருக்கோயிலுக்குள் நுழைந்து அந்த ஈசுவரனை அந்த நாய னார் வணங்கி விட்டு நம்பிக்கை உண்டாகும் பக்தியினால் விருப்பத்தை அடைந்த காதலோடு திளைத்து இன்பத்தை அடைந்து அடியேங்களுடைய தலைவனாகிய இந்த வீரட்டானேசுவரனை ஏழையேன் ஆகிய அடியேன் பழைய காலத்தில் சமண சமயத்தில் அடியேன் சேர்ந்திருந்த காலத் தில் இகழ்ந்தது என்ன முட்டாள்தனம்?' என எண்ணி தம்முடைய கழிவிரக்கத்தோடு ஒரு திருத்தாண்டகமாகிய செந்தமிழ் மொழியில் அமைந்த ஒரு பாசுரத்தைப் பாடி யருளி அந்த நாயனார் மகிழ்ச்சியை அடைந்தார். பாடல் வருமாறு: -

" உம்பர்தம் கோனை உடையவி

ரானைஉள் புக்கி றைஞ்சி நம்புறும் அன்பின் நயப்புறு

காத லினால் திளைத்தே எம்பெரு மான்தனை ஏழையேன்

நான்பண் டிகழ்ந்த தென்று தம்பரி வால்திருத் தாண்டகச்

செந்தமிழ் சாற்றி வாழ்ந்தார். ’’ - உம்பர்தம்-அவ்வாறு திருவதிகை வீரட்டானத்திற்கு எழுந்தருளிய அந்தத் திருநாவுக்கரசு நாயனார் எல்லாத் தேவர்களினுடைய, ஒருமை பன்மை மயக்கம். தம்:அசை நிலை. கோனை-அரசனை. உடைய-யாவரையும் ஆட்க ளாகப் பெற்ற, பிரானை-தலைவனாகிய அந்த வீரட்டா னேசுவரனை. உள்-அவன் எழுந்தருளியிருக்கும் திருக்கோயி லுக்குள். புக்கு-நுழைந்து. இறைஞ்சி-அந்த வீரட்டானேசு வரரை வணங்கிவிட்டு. நம்புறும்-நம்பிக்கை உண்டாகும்.