பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராண ம் - 229

தம்பு:முதல் நிலைத் தொழிற் பெயர். அன்பின்-பக்தியினால். நயப்புறு-தாம் விருப்பத்தை அடைந்த, காதலினால்-பக்தி யோடு; உருபு மயக்கம். திளைத்து-பேரானந்த சாகரத்தில் முழுகி இன்புற்று. ஏ:அசை நிலை. எம்-அடியேங்களுடைய இது திருநாவுக்கரசு நாயனார் தம்மையும் தம்முடைய தமக்கையாராகிய திலகவதியாரையும் சேர்த்துக் கூறியது. பெருமான் தனை-தலைவனாகிய இந்த வீரட்டானேசு வரனை. தன்:அசைநிலை. ஏழையேன்-அறிவு இல்லாத அடியேனாகிய, நான்-யான். பண்டு-சமண சமயத்தைச் சார்ந்து அடியேன் இருந்த அந்தப் பழைய காலத்தில். இகழ்ந்தது-இந்த வீரட்டானேசுவரனை இகழ்ந்து பேசியது என்ன மு ட் டா ள் த ன ம். என்று-என எண்ணி. தம். தம்மிடம் உண்டாகிய, பரிவால்-கழிவிரக்கத்தோடு; உருபு மயக் கம். திருத்தாண்டக-ஒரு திரு த்தாண்டகமாகிய, ச:சந்தி. செந்தமிழ்-செந்தமிழ் மொழியில் அமைந்த ஒரு பாசுரத்தை ஆகுபெயர். சாற்றி-பாடியருளி. வாழ்ந்தார். மகிழ்ச்சியை அடைந்தார். இந்தப் பாடலில் குறிப்பிட்ட பாசு ரத்தைக் கொண்டது ஏழைத் திருத்தாண்டகம் என்னும் திருப்பதிகம். அந்தத் திருப்பதிகத்தில் வரும் முதற் பாசுரம் வருமாறு: . -

...வெறிவிரவு சுவிளநற் றொங்கலானை

வீரட்டத் தானைவென் றேற்றினானைப் பொறியரவி னானைப்புள் ளுர்தியானைப்

பொன்னிறத்தினானைப் புகழ்தக் கானை அறிதற்கரியசீர் அம்மான் தன்னை

அதியரைய மங்கை அமர்ந்தான்தன்னை எறிகெடிலத் தானை இறைவன்தன்னை

ஏழையே னான்பண் டிகழ்ந்தவாறே." இந்தத் திருப்பதிகத்தில் இறுதியாக வரும் திருச் தாண்டகம் வருமாறு: . . -.

தி-15