பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230 பெரிய புராண விளக்கம்

' முலைமறைக்கப் பட்டுநீ ராடாப் பெண்கள்

முறைமுறையால் நம்தெய்வம் என்றுதீண்டித் தலைபறிக்கும் தன்மையர்களாகி நின்று

தவமேயென் நவம்செய்து தக்கதோரார் மலைமறிக்கச் சென்ற இலங்கைக்கோனை மதனழியச் செற்றசே வடியி னானை இலைமறித்த கொன்றையந் தாரான் தன்னை

ஏழையே னான்பண் டிகழ்ந்த வாறே.” பிறகு வரும் 144-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு:

திருமாலுக்கும் பிரம தேவனுக்கும் திருவடிகளையும் திருமுடியையும் பன்றி உருவெடுத்து நிலத்தைத் தோண்டிப் பார்த்தும், அன்னப் பறவையின் வடிவத்தை எடுத்து மேலே: பறந்து பார்த்தும் தெரிந்து கொள்ளாதவனாகிய அந்த விரட் டானேசுவரனை, தன்னுடைய அடியவர்களுக்கு எளியவ னாக விளங்குபவனை, பரவிய கெடில நதியின் நீர் சுற்றி ஒடும் திருவதிகை வீரட்டானத்தில் உள்ள திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் அமுதத்தைப் போன்றவனை, அறிந்து கொள்வதற்கு அருமையாக உள்ள பெருமையையும், பக்தி: யாகிய இயல்பையும் பெற்றவராகிய அந்தத் திருநாவுக்கரசு நாயனார் தம்முடைய திருவுள்ளத்தில் கழிவிரக்கத்தை அடைந்ததைய புலப்படுத்தும் செந்தமிழ் மொழியில் அமைந்த திருத் தாண்டகங்கள் பலவற்றைப் பாடியருளித் திருப்பணிகளைப் புரிந்து கொண்டு வரும் காலத்தில்.” பாடல் வருமாறு:

  • அரிஅயனுக் கரியானை

அடியவருக் கெளியானை விரிபுனல்சூழ் திருவதிகை வீரட்டானத்தமுதைத் தெரிவரிய பெருந்தன்மைத்

திருகாவுக் காசுமணம்