பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் 231

பரிவுறுசெந் தமிழ்ப்பாட்டுப்

பலபாடிப் பணிசெயும்நாள்.'

இந்தப் பாடல் குளகம். அரி-திருமாலுக்கும். அயனுக்குபிரமதேவனுக்கும். அரியானை-திருவடிகளையும் திருமுடி யையும் பன்றி உருவை எடுத்து நிலத்தைத் தோண்டிப் பார்த்தும், அன்னப் பறவையின் வடிவத்தை எடுத்து மேலே பறந்து பார்த்தும் தெரிந்து கொள்ளாதவனாகிய அந்த விரட்டானேசுவரனை. அடியவருக்கு-தன்னுடைய அடியவர்களுக்கு: ஒருமை பன்மை மயக்கம். எளியானைஎளியவனாக விளங்குபவனை. விரி-பரவிய புனல்-கெடில நதியின் நீர். சூழ்-சுற்றி ஒடும். திருவதிகை விரட்டா னத்து-திருவதிகை வீரட்டானத்தில் உள்ள திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் இட ஆகு பெயர். அமுதை-அமுதத் தைப் போன்ற அந்த சசுவரனை. த்:சந்தி. தெரிவரியயாராலும் அறிந்து கொள்வதற்கு அருமையாக உள்ள. பெரும்-பெருமையையும். தன்மை-பக்தியாகிய இயல்பையும் பெற்றவராகிய ஆகு பெயர். த்:சந்தி. திருநாவுக்கரசு-திரு நாவுக்கரசு நாயனார்; திணைமயக்கம். மனம்-தம்முடைய திருவுள்ளத்தில். பரிவு-தாம் சமண சமயத்தைச் சார்ந் திருந்ததை எண்ணிக் கழிவிரக்கத்தை. உறு-அடைந்ததைப் புலப்படுத்தும். செந்தமிழ்-செந்தமிழ் மொழியில் அமைந்த. ப்:சந்தி. பாட்டு- பாசுரங்களாகிய திருத்தாண்டகங்கள்; ஒருமை பன்மை மயக்கம். ப்:சந்தி. பல-பலவற்றை பாடிபாடியருளி. ப்:சந்தி. பணி-தமக்கு உரிய திருப்பணிகளை: ஒருமை பன்மை மயக்கம். செயும்-புரிந்து கொண்டு வரும், இடைக்குறை. நாள்-காலத்தில். . - ~

அடுத்து வரும் 145-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு:

புன்மையாகிய அறிவைப் பெற்ற சமணர்களுக்காகப் பல தீய செயல்களைச் செய்து கொண்டு வாழும் அந்தப் பல்லவ மன்னனும் தன்னுடைய பழைய தீய வினையாகிய பந்தபாசம் தன்னை விட்டு நீங்கத் துன்பங்களை விட்டு