பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

264 பெரிய புரான விளக்கம்-6

விளங்குகின்ற உயரமாகிய திருமதில் சுற்றியிருக்கும் மேற்குத் திசையில் உள்ள அடிக்கும் மணியைக் கட்டித் தொங்க விட்டிருக்கும் கோபுர வ்ாசலுக்கு வெளியில் அந்த நாயனார் வந்து சேர்ந்தார். பாடல் வருமாறு:

அஞ்சொல் திருமறை அவர்முன் பக்ர்தலும் அவரும் தொழுதுமுன் அளிகூரும் நெஞ்சிற் பெருகிய மகிழ்வும் காதலும்

நிறையன் பொடும்உரை தடுமாறச் செஞ்சொல் திருமறை மொழியங் தணர்பயில்

தில்லைத் திருநகர் எல்லைப்பால் மஞ்சிற் பொலிநெடு மதில்சூழ் குடதிசை மணிவா யிற்புறம் வந்துற்றார்."

அம்.அழகிய. சொல்-சொற்களைக் கொண்ட, ஒருமை பன்மை மயக்கம். திரு-அழகிய, மறை-இருக்கு வேதம், யஜுர் வேதம், சாம வேதம், அதர்வண வேதம் என்னும் நான்கு வேதங்களில் உள்ள மந்திரங்களை அந்தக் கிளிகளும் மைனாக்களும்; ஒருமை பன்மை மயக்கம். அவர் முன். அந்தத் திருநாவுக்கரசு நாயனாருக்கு முன்னால், பகர்தலும்கூறியவுடன். அவரும்-அந்த நாயனாரும். தொழுது-நட ராஜப் பெருமானாரை வணங்கி. முன்-முன்னால், அளிஅன்பு. கூரும்-மிகுதியாக உண்டாகும். நெஞ்சில்-தம்மு டைய திருவுள்ளத்தில். பெருகிய-பெருகி எழுந்த மகிழ்வும்ஆனந்தமும். காதலும்-விருப்பமும். நிறை-நிரம்பியிருக்கும். அன்பொடும்-பக்தியோடும். உரை-தம்முடைய திருவார்த் தைகள்; ஒருமை பன்மை மயக்கம். தடுமாற-தடுமாற்றத்தை அடைய. ச்சந்தி. செம்-சிறப்பாக உள்ள சொல்-சொற். களைக் கொண்ட ஒருமை பன்மை மயக்கம். திரு-அழகிய. மறை-இருக்கு வேதம், யஜுர் வேதம், சாம வேதம், அதர் - வண வேதம் என்னும் நான்கு .ே வ தங்க ைள யும்; ஒருமை பன்மை மயக்கம். மொழி.ஒவ்வொரு நா ளு ம்