பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் 265

பாராயணம் புரியும். அந்தனர்-மூவாயிரம் அந்தணர்கள்; ஒருமை பன்மை மயக்கம். பயில்-வாழும். தில்லை:தில்லை யாகிய சிதம்பரம் என்னும். த் : ச ந் தி. திரு-அழகிய். "செல்வத்தைப் பெற்றவர்கள் வாழும்' எனலும் ஆம்: திணை ம ய க் கம். நகர்-பெரிய சிவத்தலத்தினுடைய. எ ல் ைலப் பால்-எல்லையிடத்தில். ம ஞ் சில்-மே கங்க ளோடு; உருபு மயக்கம். பொலி-விளங்கும்.நெடு-உயரமாகிய, மதில்-திருமதில் சூழ்-சுற்றியிருக்கும். குடதிசை-மேற்குத் திசையில் உள்ள மணி-அடிக்கும் மணியைக் கட்டித் தொங்க விட்டிருக்கும். வாயில்-கோபுர வாசலுக்கு. புறம்-வெளியில். வந்து உற்றார்-அந்த நாயனார் வந்து சேர்ந்தார்.

பிறகு வரும் 162-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு: துன்பங்களை உண்டாக்கும் இந்த மானிடப் பிறவி போகுமாறு தம்முடைய திருவருளைப் பெற்ற தவத்தைப் புரிந்த முதல்வராகிய திருநாவுக்கரசு நாயனார் தம்மை நடராஜப் பெருமானாருடைய அடியவர்கள் எதிர் கொண்டு வரவேற்க அந்த அடியவர்களோடும் வளப்பத்தைப் பெற்ற நீர் நிலைகளில் உள்ள நீர் தங்களிடம் மலர்ந்துள்ள செந் தாமரை மலர்கள், வெண்டாமரை மலர்கள். செங்கழு நீர் மலர்கள், நீலோற்பல மலர்கள், குமுத மலர்கள், அல்வி மலர்கள், ஆம்பல் மலர்கள் முதலிய நீர்ப் பூக்களினுடைய நறுமணம் கமழும் பக்கத்தில் உள்ள கோபுர வாசலின் வழி யாக ஆலயத்துக்குள் அந்த நாயனார் நுழைந்து தமக்கு எதிரில் காட்சி அளித்த நடராஜப் பெருமானாரை வணங்கி விட்டு, கல்வித் துறைகள் பலவற்றையும் தங்களுக்குக் கை வரும் பெருமையைப் பெற்ற இருக்கு வேதம், யஜுர் வேதம்: சாம வேதப் , அதர்வண வேதம் முதலிய சாத்திரங்களினு. டைய கரைகளைக் கண்டு தம்மை ஆளாக உடையவராகிய அந்த நடராஜப் பெருமானாருடைய வெற்றிக் கழலைப் பூண்ட திருவடிகளை விரும்பி வணங்கும் செல்வத்தைப் பெற்ற குடும்பங்கள் நிறைந்திருக்கும் நல்ல இடத்தில்