பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

266 பெரிய புராண விளக்கம்-5

வளரும் சிவத் தன்மையே நிலாவிய அழகிய தெருவை அடைந்தார். பாடல் வருமாறு:

அல்லற் பவம் அற அருளும் தவமுதல்

அடியார் எதிர்கொள.அவரோடும் மல்லற் புனல்கமழ் மாடே வாயிலின்

வழிபுக் கெதிர்தொழு தணைவுற்றார் கல்வித் துறைபல வருமா மறைமுதல் கரைகண் டுடையவர் கழல்பேணும் செல்வக் குடிநிறை கல்வைப் பிடைவளர்

சிவமே நிலவிய திருவீதி. ' அல்லல்-துன்பங்களை உண்டாக்கும்; ஒருமை பன்மை மயக்கம். பவம்-இந்த மானிடப் பிறவி. அற-போகுமாறு. அருளும்-தம்முடைய திருவருளைப் பெற்ற தவ-தவத்தைப் புரிந்த, முதல்-முதல்வராகிய திருநாவுக்கரசு நாயனார். அடியார்-நடராஜப் பெருமானாருடைய அடியவர்கள்:

ஒருமை பன்மை மயக்கம். எதிர்கொள-தம்மை எதிர் கொண்டு வரவேற்க. கொள: இடைக்குறை. அவரோடும்அந்த அடியவர்களோடும்; ஒருமை பன்மை மயக்கம்.

மல்லல்-வளப்பத்தைப் பெற்ற, புனல்-நீர் நிலைகளில் உள்ள நீர். கமழ்-தங்களிடம் மலர்ந்திருக்கும் செந்தாமரைமலர்கள், வெண்டாமரை மலர்கள், செங்கழுநீர் மலர்கள், நீலோற்பல மலர்கள், குமுத. மலர்கள், அல்லி மலர்கள், ஆம்பல் மலர்கள் முதலிய நீர்ப்பூக்களினுடைய நறுமணம் கமழும். மாடு-பக் கத்தில் உள்ள. ஏ:அசை நிலை. வாயிலின்-கோபுர வாசலின். வழி-வழியாக. புக்கு-ஆலயத்துக்குள் அந்த நாயனார் நுழைந்து. எதிர்-தமக்கு எதிரில் காட்சி அளித்த. தொழுதுநடராஜப் பெருமானாரை வணங்கி விட்டு. கல்வித் துறைகல்வித் துறைகள்: ஒருமை பன்மை மயக்கம். பல-பலவற்றை யும். வரு-தங்களுக்குக் கை வரும்; தாங்கள் அறிந்து கொண்டு பழகியிருக்கும். மா-பெருமையைப் பெற்ற. மறை