பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆதிருநாவுக்கரசு நாயனார். புராணம் 2.67.

இருக்கு வேதம், யஜுர் வேதம், சாம வேதம், அதர்வன வேதம், ஒருமை பன்மை மயக்கம். முதல்-முதலிய சாத்திரங் களினுடைய கரை-கரைகளை, ஒருமை பன்மை மயக்கம். கண்டு உடையவர்-கண்டு தம்மை ஆளாக உடையவராகிய அந்த நடராஜப் பெருமானாருடைய. கழல்-வெற்றிக் சுழ லைப் பூண்டிருக்கும் திருவடிகளை; ஆகு பெயர். பேணும்விரும்பி வணங்கும். செல்வ-செல்வத்தைப் பெற்ற. க்:சந்தி. குடி-குடும்பங்கள்; ஒருமை பன்மை மயக்கம். நிறை-நிறைந் திருக்கும். நல்-நல்ல. வைப்பிடை-இடத்தில். வளர் -வளரும். சிவமே-சிவத்தன்மையே; என்றது சிவபெரு விமானுக்கு உரிய விபூதியைப் பூசிக்கொள்ளுதலும், உருத்தி ராக்க மாலையைத் தரிப்பதும், சடாபாரத்தைப் பூண்பதும் ஆகியவற்றை. நிலவிய-நிலாவிய. திரு-அழகிய வீதி' தெருவை. அனைவுற்றார்-அந்த நாயனார் போய்ச் சேர்ந் தார். -- -

பிறகு வரும் 163-ஆம் பாடலின் கருத்து வருமாறு: "புதிய மின்னலைப் போல ஒளியை வீசும் மாணிக்கங் -களைக் கோத்த நீண்ட மாலைகளும், நறுமணம் கமழும் மலர்மாலைகளும் நிறைந்து தோரணங்களாகத் தொங்க விட்டிருக்கும் அழகிய ஒரு திரு வீதியில் உலகங்களினுடைய தலைவர்களாகிய தேவர்களினுடைய விசாலமாக உள்ள கிரீடங்கள் ஒன்றனோடு ஒன்று மோதித் தரையில் விழுமாறு தள்ளிவிட்ட மாணிக்கங்களைப் போக்கிவிட்டு வாயுதேவன் திருப்பணியைப் புரிய வருணபகவான் தீர்த்தத்தைக்கொண்டு. வந்து அபிடேகத்துக்கு வழங்கித் தன்னுடைய பணியைப் புரியவும் அந்த மாணிக்கங்கள் குற்றமுடையவையாகும் என்று எண்ணி யாவரும் தரையில் விழுந்து வணங்கிவிட்டுப் பிறகு தரையிலிருந்து எழுந்து நின்றுகொண்டிருக்கும் அடிய வர்கள் அழகிய துடைப்பத்தால் பெருக்குவார்கள்; குளிர்ந்த நீரைத் தரையின்மேல் விட்டுச் சுத்தம் செய்வார்கள்.” பாடல் வருமாறு: - - -- " . "