பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

268 பெரிய புராண விளக்கம்-சி

நவமின் சுடர்மணி நெடுமா.

லையும்ங்று மலர்மாலையும்நிறை திருவீதிப் புவனங் களின்முதல் இமையோர்தடமுடி பொருதுந் தியமணி போகட்டிப் பவனன் பணிசெய வருணன்புனல் கொடு

பணிமா றவும்.அவை பழுதாமென் - றெவரும் தொழுதெழும் அடியார் திருவல

கிடுவார் குளிர்டினல் விடுவார்கள். ' நவ-புதிய, மின்-மின்னலைப் போல். சுடர்-ஒளியை, வீசும். மணி-மாணிக்கங்களைக் கோத்த; ஒருமை பன்மை. மயக்கம். நெடுமாலையும்-நீளமாகிய மாலைகளை யும்: ஒருமை பன்மை மயக்கம். நறு-நறுமணம் கமழும். மலர் மாலையும்-மலர் மாலைகளும்; ஒருமை பன்மை மயக்கம். நிறை-நிறைந்து தோரணங்களாகத் தொங்க விட்டிருக்கும். திரு-அழகிய; செல்வர்கள் வாழும்' எனலும் ஆம்; திணை மயக்கம். வீதி-ஒரு திரு வீதியில். ப்:சந்தி. புவனங்களின்உலகங்களினுடைய,முதல்-தலைவர்களாகிய, ஒருமை பன்மை: மயக்கம். இமையோர்-தேவர்களினுடைய, ஒருமை பன்மை மயக்கம், தடவிசர்லமாகிய முடி-கிரீடங்கள்: ஒருமை. பன்மை மயக்கம். பொருது-ஒன்றனோடு ஒன்று மோதி. உந்திய-தரையில் விழுமாறு தள்ளிவிட்ட மணி-அந்த மாணிக்கங்களை ஒருமை பன்மை மயக்கம். போகட்டி. போக்கி விட்டு. ப்:சந்தி, பவனன்-வாயுதேவன். பணிசெயபெருக்குதலாகிய திருப்பணியைப் புரிய செய: இடைக் குறை. வருணன்-சமுத்திர ராஜனாகிய வருண பகவான். புனல்கொடு-சமுத்திரத்தில் உள்ள நீரைக்கொண்டு. பணி மாறவும்-தரையைத் துடைக்கும் திருப்பணியைச் செய்யவும். அவை-அந்தத் தரையில் விழுந்த மாணிக்கங்கள். பழுதுகுப்பை. ஆம் ஆகும். என்று-என எண்ணி. هr ن-فاقه به யாவரும். தொழுது-தரையில் விழுந்து வணங்கிவிட்டு,