பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.திருநாவுக்கரசு நாயனார் புராணம் 269.

எழும்.பிறகு தரையிலிருந்து எழுந்து நின்று கொண்டிருக்கும். அடியார்-நடராஜப் பெருமானாருடைய அடியவர்கள்; ஒருமை பன்மை மயக்கம். திரு-அழகிய அலகு இடுவார்துடைப்பத்தால் அந்த மாணிக்கங்களைப் பெருக்குவார்சுள்: ஒருமை பன்மை மயக்கம். குளிர்-குளிர்ச்சியைப் பெற்ற. புனல்-நீரை. விடுவார்கள்-தரையின்மேல் விட்டுச் சுத்தம் செய்வார்கள்.

பிறகு வரும் 164-ம் கவியின் கருத்து வருமாறு : மேலே உள்ள ஆகாயமாகிய இடம் நிறையத் தொங்க விட்டிருக்கும் துவசங்களினூடு விரிந்த வெப்பமான சூரியன் விசும் கிரணங்கள் நுழைவதற்கு அருமையாக இருக்கும் அழகு பெருகி விளங்கிய அழகிய ஒரு தெருவை திருமுறையாகிய தேவாரப் பதிகங்களைப் பாடியருளி மகிழும் பெருமையைப் பெற்றவராகிய திருநாவுக்கரசு நாயனார் நடராஜப் பெருமா னாரை வணங்கிவிட்டு இந்த உலகத்தில் விளங்கும் அழகிய இருக்கு வேதம், யஜூர் வேதம்: சாம வேதம், அதர்வண் வேதம் என்னும் நான்கு வேதங்களையும் முறையாக அத்திய யனம் செய்து நிறைவேற்றிய வேதியர்கள் அவற்றை ஒதும் பெருகி எழுந்த இனிய கானம் நல்ல பண்புகள் நிறைந்த முனிவர்கள் கூறும் தோத்திரங்களோடும் ஆரவாரம் பெருகி எழுந்த நிலையில் ஏழு தளங்களைப் பெற்ற கோபுர வாசலில் தம்முடைய திருமேனி தரையில் படியுமாறு விழுந்து அந்த, நடராஜப் பெருமானாரை வணங்கிவிட்டு ஆலயத்துக்குள் அந்த நாயனார் நுழைந்தார். பாடல் வருமாறு: . " மேலம் பரதலம் நிறையும் கொடிகளில் விரிவெங் கதிர்நுழை வரிதாகும் கோலம் பெருகிய திருவி தியைமுறை

குலவும் பெருமையர் பணிவுற்றே ஞாலம் திகழ்திரு மறையின் பெருகொலி +.

நலமார் முனிவர்கள் துதியோடும்.