பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

276 புராணவிளக்கம்

ஒலம் பெருகிய நிலையேழ் கோபுரம்

உறமெய் கொடுதொழு துள்புக்கர்ர்.” மேல்-மேலே உள்ள. அம்பரதலம்.ஆகாயமாகிய இடம். திறையும்-நிறையத் தொங்கவிட்டிருக்கும். கொடிகளில்.துவசங்களினூடு. விரி-விரிந்த, வெம்-வெப்பமாகிய கதிர்சூரியனுடைய கிரணங்கள்; ஒருமை பன்மை மயக்கம்; ஆகு பெயர். நுழைவரிதாகும்-உள்ளே நுழைவதற்கு அரியதாக இருக்கும். கோலம்-அழகு. பெருகிய-பெருகி விளங்கிய. திரு-அழகிய; செல்வர்கள் வாழும் எனலும் ஆம்; திணை மயக்கம். விதியை-ஒரு தெருவை முறை-திருமுறையாகிய தேவாரப் பதிகங்களைப் பாடியருளி. குலவும்-மகிழும். பெருமையர்-பெருமையைப் பெற்றவராகிய திருநாவுக்கரசு நாயனார். பணிவுற்று-நடராஜப் பெருமானாரை வணங்கி விட்டு. ஏ:அசைநிலை. ஞாலம்-இந்த உலகத்தில். திகழ்விளங்கும். தி ரு - அழகி ய. மறையின்-இருக்கு வேதம், யஜுர் வேதம், சாம வேதம், அதர்வண வேதம் என்னும் தான்கு வேதங்களையும் முறையாக அத்தியயனம் செய்து நிறைவேற்றிய வேதியர்கள் அவற்றை ஒதும்;ஒருமை பன்மை மயக்கம். பெருகு ஒலி-பெருகி எழுந்த இனிய கானம். நலம்பல நல்ல பண்புகள்; ஒருமை பன்மை மயக்கம். ஆர். நிரம்பிய. முனிவர்கள்-முனிவர்கள் கூறும். துதியோடும். தோத்திரங்களோடும்; ஒருமை பன்மை மயக்கம். ஒலம்ஆரவாரம். பெருகிய-பெருகி எழுந்த, நிலை-நிலையில்ஏழ்-ஏழு தளங்களைப் பெற்ற, கோபுரம்-கோபுர வாசலில். உறமெய்கொடு-தம்முடைய திருமேனியைக் ெகாண் டு தரையில் படியுமாறு விழுந்து. தொழுது-நடராஜப் பெருமா னாரை வணங்கிவிட்டு. உள் - அ ந் த ஆலயத்துக்குள். புக்கார்-அந்த நாயனார் நுழைந்தார். o அடுத்து உள்ள 165-ஆம் கவியின் கருத்து வருமாறு: வளரும் தங்கத்தைப் பதித்ததும் மேகங்கள் தவழ, அவற்றை அணிந்துள்ள அழகிய திருக்கோயிலை வலமாக