பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் 27.

வந்து சுழற்சியை அடையும் வரைக்கும்.நிற்காத அளவினால் பெருகியதாக உள்ள பேராவலுக்கு நடுவில் தம்முடைய திரு -வுள்ளத்தில் எழுந்து பொங்கும் பக்தியாகிய சமுத்திரத்தைப் போல நிறைந்திருக்கும் தம்முடைய திருமேனியில் எல்லா இடங்களிலும் புளகாங்கிதமாகிய மயிர்க்கூச்சுச் செறிந் துள்ள வரிசை அமைய அழகு மிகுதியாக உள்ள தங்கத்தைப் பதித்த கோபுரவாசலின் வழியே ஆலயத்துக்குள் நுழைபவ :ாகிய அந்தத் திருநாவுக்கரசு நாயனார் தமக்கு முன்னால் தம்முடைய திருக்கழுத்தில் விளங்குகின்ற ஆலகால நஞ்சைக் கொண்ட நடராஜப் பெருமானார் திருநடனம் புரிந்தருளும் கனகசபையாகிய பொன்னம்பலத்தைத் தமக்கு எதிரின் தம்முடைய கண்களால் தரிசித்தார். பாடல் வருமாறு:

" வளர்பொற் கணம்அணி திருமாளி கையினை

வலம்வந் தலமரு வரைநில்லா அளவிற் பெருகிய ஆர்வத் திடைஎழும் அன்பின் கடல்நிறை உடல்எங்கும் புளகச் செறிநிரை விரவத் திருமலி

பொற்கோ புரமது புகுவார்முன் களனிற் பொலிவிடம் உடையார் கடம்கவில்

கனகப் பொதுஎதிர் கண்ணுற்றார். ’’ வளர்-வளரும். பொன் - தங்கத்தைப் பதித்ததும்; வினையாலணையும் பெயர். கனம்-மேகங்கள்; ஒருமை பன்மை மயக்கம். அணி-தவழ அவற்றை அணிந்துள்ள. திரு.அழகிய. மாளிகையினை-நடராஜப் பெருமானாருடைய திருக்கோயிலை. வலம் வந்து-வலமாக வந்து, அலமருதம்முடைய திருவுள்ளத்தில் சுழலும் சுழற்சியை, வினை யாலணையும் பெயர். வரை-பெறுகிறவரையிலும். நில்லாநிற்காத அளவில்-அளவினால், உருபு மயக்கம். பெருகியபெருகியதாக உள்ள. ஆர்வத்திடை-பேராவ லுக்கு நடுவில், எழும்-பொங்கி எழும். அன்பின்-பக்தியாகிய, கடல்-சமுத்.