பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

272 பெரிய புராணம் விளக்கம்-ே

திரத்தைப் போல. நிறை-நிறைந்திருக்கும். உடல்-தம் முடைய திருமேனியில். எங்கும்-எல்லா இடங்களிலும்; ஒருமை பன்மை மயக்கம். புளக-புளகாங்கிதமாகிய மயிர்க் கூச்சு. ச்:சந்தி. செறி-செறிந்துள்ள. நிரை-வரிசை. விரவஅமைய. த்:சந்தி, திரு-அழகு. மவி-மிகுதியாக உள்ள. பொன்-தங்கத்தைப் பதித்த. கோபுரமது-கோபுர வாசலின் வழியாக. அது:பகுதிப் பொருள் விகுதி. புகுவார்-ஆலயத் . துக்குள் நுழைபவராகிய அந்தத் திருநாவுக்கரசு நாயனார். முன்-தமக்கு முன்னால், களனில்-தம்முடைய திருக்கழுத் தில். பொலி-விளங்கும். விடம்- ஆலகால நஞ்சை. உடை யார்-பெற்றவராகிய நடராஜப் பெருமானார். நடம்-திரு. நடனத்தை. நவில் - புரிந்தருளும். கனகப்பொது - கனக சபையாகிய பொன்னம்பலத்தை. எதிர்-தமக்கு எதிரில். கண்ணுற்றார்-தம்முடைய கண்களால் தரிசித்தார். கண்: ஒருமை பன்மை மயக்கம். .

பிறகு வரும் 166-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு: நெடுங்காலமாக விளங்கும் அழகோடு வீசும் பெருகிய :பிரகாசம் நிறைந்திருக்கும் பொன்னம்பலமாகிய கனக. சபையைத் தாம் தியானிக்கும் வண்ணம் தமக்கு நேரில் சேரு மாறு உண்டாகும் பக்தியினால் ஆனந்தத்தை அடையும் நற்பண்பை முன்னால் அடையுமாறு உண்டாகும் நிலைமை சேர்ந்திருக்க தம்முடைய திருமுடியை அன்னப்பறவையின் வடிவத்தை எடுத்து மேலே பறந்து தேடிப் பார்த்தும் பிரம. தேவனும், திருவடிகளைப் பன்றியின் வடிவத்தை எடுத்து நிலத்தைத் தோண்டிப் பார்த்தும், தேவர்களும் முதலாக இருக்கும் யோனிகளாகிய பல உயிர்களும் தெளிவை அடை யாத சிதம்பரத்தில் உள்ள ஆலயத்தில் விளங்கும் திருச் சிற்றம்பலத்தில் திருநடனம் புரிந்தருளும் நடராஜப் பெரு, மானாருடைய் வெற்றிக் கழலைப் பூண்டு விளங்கும் திருவடிகள் செய்தருளும் அமுதத்தைப் போன்ற அழகிய நடனத்தை திருப்தியை அடையாத விதத்தோடு வணங்கிப்