பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் 277

விழுந்து நடராஜப் பெருமானாரை வணங்கிவிட்டு. எழபிறகு தரையிலிருந்து எழுந்து நின்று கொண்டிருக்க. என்றுநீ என்றைக்கு. எய்தினை-இந்தச் சிதம்பரத்தை அடைந் தாய். என-என்று; இடைக்குறை. மன்று-சிதம்பரத்தில் உள்ள ஆலயத்தில் விளங்கும் கனகசபையாகிய பொன்னம் பலத்தில். 'மன்று-சிற்சபை எனலும் ஆம். ஆடும்-நின்று கொண்டு திருநடனம் புரிந்தருளும். அத்தன்-தந்தையைப் போன்றவனாகிய அந்த நடராஜப் பெருமான். திருவருள்தன்னுடைய திருவருளை. பொழியும்-மழையைப் போலச் சொரியும். கருணையில்-கருணையோடு; உருபு மயக்கம். அருள்-அவன் வழங்கும் திருவருளை. பெற்றிடபெற்றத னால், வரும்-உண்டாகும், ஆனந்தம்-பேரானந்தத்தால். மெய்-உண்மையாகிய, த்:சந்தி. தன்மையில்.பான்மை யோடு, உருபு மயக்கம். விருத்த-ஒரு திருவிருத்தமாகிய. த்:சந்தி, திரு.அழகிய மொழி-பாசுரத்தை. பாடி-அந்த நாயனார் பாடியருளி. ப்:சந்தி. பின்னையும்-பிறகும். மேன் மேலும்-மேலும் மேலும். சித்தம்-தம்முடைய திருவுள்ளத் தில். பெருகிய-பெருகி எழுந்த. பரிவால்-அன்பினால். இன்பு-ஆனந்தத்தை. உறு-அடையும். திரு நேரிசை-ஒரு திரு நேரிசையாகிய, மொழி-பாசுரத்தையும். பகர்கின் தார்.அந்த நாயனார் பாடியருளுகிறவரானார். -

அந்தநாயனார் கொல்லிப் பண்ணில் பாடியருளிய சிதம் பரத்தைப் பற்றிய திருநேரிசை ஒன்று வருமாறு: - செஞ்சடைக் கற்றை முற்றத் -

திளநிலா எறிக்கும் சென்னி நஞ்சடை கண்ட ன்ாரைக்

காண்லாம் நறவம் தாறும் மஞ்சடை சோலைத் தில்லை

மல்கு சிற்றம் பலத்தே தி-18