பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் 281

நீடிய-அந்தத் திருநாவுக்கரசு நாயனார் நெடுங்காலமாக விளங்கிய.மணியின்-மாணிக்கங்களினுடைய, ஒருமை பன்மை. மயக்கம். .ே சா தி - ஒளி .ெ வ ள் ள ம். நிறை-நிறைந்த். திருமுன்றில்-நடராஜப் பெருமானாருடைய ஆ ல ய த் தி னுடைய அழகிய முற்றத்தின். முன்றில்-இல்முன்; பின் முன்னாகத் தொக்க தொகை. மாடும்-பக்கத்திலும். ஆடுஆடி அசையும். உயர்-உயரத்தில் கட்டியிருக்கும். கொடிதுவசங்கள்: ஒருமை பன்மை மயக்கம். சூழ்-சுற்றிக் கட்டித் தொங்கவிட்டிருக்கும். பொன்-தங்கத்தால் ஆகிய தேர். இரதம் ஓடும். அணி-அலங்காரத்தைப் பெற்ற. திரு-அழகிய, வீதியுள்ளும்-தெருவுக்கு உள்ளும். கூடிய-தம்மால் செய்யக் கூடிய பணிகள்-திருப்பணிகளை. செய்து-அந்த நாயனார் புரிந்து கொண்டு. கும்பிடும்-அந்த நடராஜப் பெருமா னாரைத் தம்முடைய கைகளைத் தம்முடைய தலையின்மேல். வைத்துக் கூப்பிக் கும்பிடும். தொழிலராகி-செயலை உடைய வராகி. ப்:சந்தி. பாடிய-தாம் பாடியருளிய. புனித-பரிசுத்த: மாகிய, வாக்கின்-தம்முடைய வாக்கினால், பணிகளும்-. தேவாரப் பதிகங்களைப் பாடியருளும் திருப்பணிகளையும். பயில-மிகுதியாக, ச்:சந்தி, செய்வார்-அந்த நாயனார். புரிவாரானார்.

அடுத்து உள்ள 171-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு: அந் சத் திருநாவுக்கரசு நாயனார்.நடராஜப்பெருமானார். வழங்கிய திருவருளைப் பெற்ற பெரிய ஆனந்தம் பொங்கி, எழ, "அன்னம் பாவிக்கும்” என்று தொடங்கும் திருக்குறுந்: தொகைகளாகிய பாசுரங்களை அந்த நாயனார் பாடியருளி அழகிய உழவாரப் படையை எடுத்துக்கொண்டு பெரியதாக அமைந்து தம்முடைய திருவுள்ளத்தில் எழும் விருப்பத் தோடும் பெருமையையும் அழகையும் பெற்ற திருத்தொண்டு களைப் புரிந்துகொண்டு விருப்பம் உண்டாகும் தம்முடைய திருமேனியில் தம்முடைய கண்களிலிருந்து பொழியும் நீர் தம்முடைய திருமேனி முழுவதும் பூசிக் கொண்டிருந்த