பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

282 பெரிய புராண விளக்கம்-6

வெண்மையான விபூதியில் வழிந்து அந்த விபூதியைச் சேறு போலச் செய்ய. பாடல் வருமாறு:

அருட்பெரு மகிழ்ச்சி பொங்க

"அன்னம்பா லிக்கும்’ என்னும் திருக்குறுங் தொகைகள் பாடித்

திருவுழ வாரம் கொண்டு பெருத்தெழு காத லோடும்

பெருந்திருத் தொண்டு செய்து விருப்புறு மேனி கண்ணிர்

வெண்ணிற்று வண்ட லாட ”

இந்தப் பாடல் குளகம். அருள்-அந்தத் திருநாவுக்கரசு நாயனார் நடராஜப் பெருமானார் வழங்கிய திருவருளைப் பெற்றதனால் உண்டாகிய, பெரு-பெரிய. மகிழ்ச்சிஆனந்தம். பொங்க-பொங்கி எழ. அன்னம் பாலிக்கும்" என்னும்- அன்னம் பாவிக்கும்’ என்று தொடங்கும். திருக் குறுந்தொகைகள்-திருக்குறுந் தொகைகளாகிய பாசுரங் களை. பாடி-அந்த நாயனார் பாடியருளி. த்:சந்தி. திருஅழகிய. உழவாரம்-உழவாரப் படையை கொண்டு-தம் முடைய கைகளில் எடுத்துக்கொண்டு. பெருத்து-பெரியதாக அமைந்து. எழு-தம்முடைய திருவுள்ளத்தில் எழும். காத லோடும்-விருப்பத்தோடும். பெரும்.பெருமையையும். திருஅழகையும் பெற்ற த்: சந்தி. தொண்டு - தம்முடைய உழ வாரப்படையினால் ஆலயத்தில் பிராகாரத்தில் பக்தர்கள் நடக்கும் வழியில் உள்ள புற்களைச் செதுக்கியும், கல்முதலிய வற்றை ஒதுக்கியும் புரியும் திருத்தொண்டுகளை ஒருமை பன்மை மயக்கம்.செய்து-புரிந்துகொண்டு. விருப்பு-விருப்பம். உறு-உண்டாகும். மேனி-தம்முடைய திருமேனியில். கண்தம்முடைய கண்களிலிருந்து ஒருமை பன்மை மயக்கம். நீர்-பொழியும் நீர். வெண்ணிற்று தம்முடைய திருமேனி முழுவதும் பூசிக்கொண்டிருந்த வெண்மையாகிய விபூதியில்