பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு நாவுக்கரசு நாயனார் புராணம் 283

வழிந்து. வண்டல் ஆட-அந்த விபூதியைச் சேற்றைப் போலச் செய்ய.

இந்தப் பாடலில் குறிப்பிட்ட திருக்குறுந் தொகை

வருமாறு: -

  • அன்னம் பாவிக்கும் தில்லைச்சிற் றம்பலம் பொன்னம் பாவிக்கும் மேலுமிப் பூமிசை என்னன் பாவிக்கு மாறுகண் டின்புற இன்னம் பாலிக்கு மோஇப் பிறவியே. அந்த நாயனார் பாடிய மற்றொரு திருப்பதிகத்தில் உள்ள முதற் பாசுரம் வருமாறு: -
  • பனைக்கை மும்மத வேழம் உரித்தவன்

நினைப்ப வர்மனம் கோயிலாக் கொண்டவன் அனைத்து வேடமாம் அம்பலக் கூத்தனைத் தினைத்த னைப்பொழுதும்மறந் துய்வனோ. ”

.# *

அந்த நாயனார் பாடியருளிய மற்றொரு திருப்பதிகம் சித்தத் தொகைத் திருக்குறுந்தொகை என்னும் பெயரை

உடையது. அதில் வரும் முதற் பாசுரம் வருமாறு: - சிந்திப் பார்மனத் தான் சிவன் செஞ்கடர்

அந்தி வான் நிறத் தான் அணி யார்மதி முந்திச் சூடிய முக்கண்ணி னான்அடி வந்திப் பாரவர் வானுல காள்வரே. ' பிறகு வரும் 172-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு: அந்தத் திருநாவுக்கரசு நாயனார் தாம் விரும்பிய திருப் பணிகளைப் புரிந்துகொண்டு திகழ்ந்த காலத்தில் திருவேட் - களத்தில் எழுந்தருளியிருக்கும் இடபத்தை உயர்த்திய துவசத்தைப் பெற்றவராகிய பாசுபதேசுவரரை அந்தத் தலத்திற்கு எழுந்தருளி முன்னால் பணிந்துவிட்டு ஒருதிருப் பதிகத்தைப் பாடியருளி நீலோற்பல மலரைப் போல நீல நிறத்தைப் பெற்ற ஆலகால விடத்தை விழுங்கிய திருக் கழுத்தைப் பெற்றவராகிய பால்வண்ண நாதேசுவரர்