பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

284. பெரிய புராண விளக்கம்

நிலைபெற்றுத் திருக்கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் திருக்கழிப்பாலைக்கு அந்தத் திருநாவுக்கரசு நாயனார். எழுந்தருளி இந்த மண்ணுலகத்தில் வாழும் மக்கள் நல்வாழ் வைப் பெறும் வண்ணம் அடைந்தார். பாடல் வருமாறு:

மேவிய பணிகள் செய்து

விளங்கும் நாள் வேட்களத்துச் சேவுயர் கொடியார் தம்மைச்

சென்றுமுன் வணங்கிப் பாடிக் காவியங் கண்டர் மன்னும்

திருக்கழிப் பாலை தன்னில் காவினுக் கரசர் சென்று

நண்ணினார் மண்ணோர் வாழ. ’’ மேவிய-தாம் விரும்பிய பணிகள் - திருப்பணிகளை. செய்து-புரிந்து கொண்டு. விளங்கும்-திகழும். நாள்-காலத் தில், வேட்களத்து - திருவேட்களத்தில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளி யிருக்கும். ச்:சந்தி, சே-இடபமாகிய, உயர் கொடியார் தம்மை-உயர்த்திய துவசத்தைப் பெற் றவ ராகிய பாசுபதேசுவரரை. தம்: அசை நிலை. ச்சந்தி. சென்று-எழுந்தருளி. முன்-அந்த ஈசுவரருடைய சந்நிதியில். வணங்கி-பணிந்துவிட்டு. ப்:சந்தி. பாடி-ஒருதிருப்பதிகத். தைப் பாடியருளி. க்:சந்தி, காவி-ஆலகால விடத்தை விழுங்கினமையால் நீலோற்பல மலரைப் போல நீல நிறத். தைப் பெற்ற. அம்-அழகிய. கண்டர்-திருக் கழுத்தைப் பெற்றவராகிய பால்வண்ணநாதேசுவரர். மன்னும்-நிலை பெற்றுத் திருக்கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும். திருக் கழிப்பாலை தன்னில்-திருக்கழிப்பாலை என்னும் சிவத்: தலத்துக்கு உருபு மயக்கம். தன் அசை நிலை, நாவினுக் கரசர்-அந்தத் திருநாவுக்கரசு நாயன்ார். சென்று-எழுந்: தருளி. மண்ணோர்-இந்த மண்ணுலகத்தில் வாழும் மக்கள்; ஒருமை பன்மை மயக்கம். வாழ-நில்ல வாழ்வைப் பெறும் வண்ணம். நண்ணினார்-அடைந்தார். ‘. . . ; .