பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் 285.

திருவேட்களம்: இது சோழநாட்டில் உள்ள சிவத்தலம். இங்கே கோ யி ல் கொண்டிருப்பவர் பாசுபதேசுவரர். அம்பிகை நல்லநாயகி. இது சிதம்பரத்துக்குக் கிழக்குத் திசையில் இரண்டு மைல் தூரத்தில் உள்ளது. திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் சிதம்பர்த்தில் தங்கியிருப்பதற்கு, அஞ்சி இந்தத் தலத்தில் தங்கிக்கொண்டிருந்து சிதம்பரத் துக்கு எழுந்தருளி நடராஜப் பெருமானாரைத் தரிசித்து வருவார். இது அருச்சுனனுக்குப் பாசுபதேசுவரர் பாசுப தாஸ்திரத்தை வழங்கியருளிய தலம். பாசுபதாஸ்திரத் தைக் கையில் ஏந்திய உற்சவ விக்கிரகமும் அருச்சுனனுடைய உற்சவ விக்கிரகமும் இந்த ஆலயத்தில் உள்ளன. வைகாசி மாதம் விசாக நட்சத்திரத்தில் இந்த உற்சவம் நடை பெறு: கிறது. இதைப் பற்றிய ஒரு பாசுரம் வருமாறு:

" கட்டப் பட்டுக் கவலையில் வீழாதே

பொட்ட வல்லுயிர் போவதன் முன்னம்நீர் சிட்டனார் திரு வேட்களம் கைதொழப் பட்ட வல்வினை ஆயின பாறுமே. ” - இந்தப் பாசுரம் திருநாவுக்கரசு நாயனார் பாடியருளிய திருக்குறுந்தொகை. மற்றொரு திருக்குறுந் தொகை வருமாறு:

" நன்று நாள்தொறும் நம்வினை போயறும் என்றும் இன்பம் தழைக்க இருக்கலாம் சென்று நீர்திரு வேட்களத் துள்ளுறை துன்று பொற்சடை யானைத் தொழுமினே. ’’ திருக்கழிப்பாலை: இது சோழநாட்டில் உள்ள சிவத் தலம். இங்கே கோயில் கொண்டிருப்பவர் பால்வண்ண நாதேசுவரர். அம்பிகை வேதநாயகி. இது சிதம்பரத். திற்குத் தென்கிழக்குத் திசையில் ஏழு மைல் தூரத்தில் உள்ளது. இந்தத் தலத்தில் இருந்த ஆலயத்தைக் கொள்ளிட நதி அடித் துக்கொண்டு போய்விட்டமையினால், அந்தக் கோயிலில் இருந்த பால்வண்ணநாதேசுவரர் சிதம்