பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"286 - பெரிய புராண விளக்கம்-6.

பரத்துக்குத் தென் கிழக்குத்திசையில் இரண்டரை மைல் தூரத்தில் உள்ள சிவபுரி என்னும் சிவத்தலத்தில் ஒரு தனி ஆலயத்தில் எழுந்தருளியிருக்கிறார். சிவலிங்கப் பெருமான் வெண்ணிறமுடையவராக விளங்குகிறார். அதனால்தான் பால்வண்ணநாதேசுவரர் என்னும் திருநாமம் வந்தது. வன்மீக முனிவர் வழிபட்ட தலம் இது. இந்தத் தலத்தைப் பற்றித் திருநாவுக்கரசு நாயனார் காந்தாரப் பண்ணில் ஒரு திருப்பதிகத்தையும், திருநேரிசை, திருவிருத்தம், திருக்குறுந் தொகை, திருத் தாண்டகம் என்பவை அடங்கிய திருப்பதி கங்களையும் பாடியருளியிருக்கிறார். -

அவற்றுள் ஒரு திருத்தாண்டகம் வருமாறு: ' ஊதுடுத்தி ஒன்பது வாசல் வைத்து

ஒள்ளெலும்பு தூணா வுரோமம் மேய்ந்து தாமெடுத்த கூரை தவிரப் போவார்

தயக்கம் பலபடைத்தார் தாம ரையினார் கானெடுத்து மாமயில்கள் ஆலும் சோலைக்

கழிப்பாலை மேய கபாலப் பனார் வானிடத்தை யூடறுத்து வல்லைச் செல்லும்

வழிவைத்தார்க் கவ்வழியே போதும் நாமே." அந்த நாயனார் இந்தத் தலத்தைப்பற்றிக் காந்தாரப் :பண்ணில் பாடியருளிய ஒரு பாசுரம் வருமாறு: .

  • வனபவள வாய் திறந்து வானவர்க்கும் தானவனே

என்கின் றாளால் . சினபவளத் திண்டோள்மேற் சேர்ந் திலங்கு

வெண்ணிற்றன் என்கின்றாளால் அனபவள மேகலையோடப்பாவைக் கப்பாவான் o

என்கின் றாளால் கனபவளம் சிந்தும் கழிப்பாலைச் சேர்வானைக் . கண்டால் கொல்லோ, ’’ “ . . . . . . -