பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/312

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் 31E

குழுவில். அரன் அடியார்-அரனாகிய வீரட்டானேசுவரனு: டைய அடியவராகிய திருநாவுக்கரசு நாயனார். இன்பம்ஆனந்தத்தை. எய்தி-அடைந்து. உம்பர்களும்-தேவர்களும்: போற்று-வாழ்த்துக்களை; ஒருமை பன்மை மயக்கம், முதனி லைத் தொழிற் பெயர். இசைப்ப-கூறிப்பாராட்டச் சந்தி, சிவம்-சிவபெருமானுடைய திருநாமங்களை; ஆகு பெயர். பெருகும்-பெருகக் கூறும். ஒலி-இனிய சத்தத்தை உலகம் எல்லாம்-இந்தப் பூமண்டலம் முழுவதும். நிறைத்தார்நிரம்பியிருக்கும் வண்ணம் புரிந்தருளினார்.

பவள வாய்ப் பிள்ளை 'மதுர மொழிப் பவள வாயார்., 'உய்யும் நெறிகாட்டும் பவள வாயர்.” என்று சேக்கிழார் பாடியருளியவற்றைக் காண்க.

பிறகு வரும் 84-ஆம் பாடலின் கருத்துவருமாறு:

ஆளுடைய பிள்ளையாராகிய திருஞான சம்பந் , மூர்த்தி நாயனாருடைய வெற்றிக் கழலைப் பூண்ட திருவடி களைப் பணியும் பாக்கியத்தை அடியேன் அடைந்தேன்' என்று எண்ணித் திருநாவுக்கரசு நாயனார் ஆனந்தத்தை அடைய பெருகிய சிவஞான வள்ளலாராகிய அந்தத் திரு ஞான சம்பந்த மூர்த்தி நாயனார் வாகீசராகிய திருநாவுக் கரசு நாங்னாரைப் பணியும் பாக்கியத்தை அடைந்ததற்குத் தம்முடைய திருவுள்ளத்தில் ஆனந்தம் பொங்கி எழ அந்த இரண்டு நாயன்மார்களும் தங்களுடைய திருவுள்ளங்களில் நிறைந்திருந்த விருப்பததோடு ஒரு நாயனார் மற்றொரு நாயனாரோடு கூடிய உண்மையுடனும் ஊழிக்காலத்தின் இறுதியில் கடலின் வெள்ளமாகிய நீரில் மிதந்த தோனி .புரமாகிய சீகாழியில் உள்ள ஆலயத்தில் ஒரு கட்டு மலையின் மேல்இருந்த அழகிய தோணியில் வீற்றிருந்தவராகிய தோணி யப்பருடைய வெற்றிக் கழலைப் பூண்ட திருவடிகளைப் அணியும் விருப்பத்தை அந்த நாயனார் மிகுதியாகப் பெற்றிருந்தார். பாடல் வருமாறு: r