பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/358

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் 257'

சுவரர் வழங்கிய திருவருளாகிய, நெறியே-வழியாகவே. நல்லூரில்-திருநாவுக்கரசு நாயனார் திருநல் லூருக்கு உருபு மயக்கம். வந்து-எழுந்தருளி. அணைந்து-அடைந்து. மன்னுஅந்தத் திருநல்லூரில் நிலை பெற்று வாழும். திருத்தொண்ட னார்-திருத்தொண்டர்கள்; ஒருமை பன்மை மயக்கம். வணங்கி-தம்மைத் தரையில் விழுந்து பணிந்து விட்டு. மகிழ்ந்து-மகிழ்ச்சியை அடைந்து. எழும்-பிறகு தரையி விருந்து எழுந்து நின்று கொண்டிருக்கும். பொழுதில்-சமயத் 'தில். உன்னுடைய-திருநாவுக்கரசனே. நின்னுடைய. நினைப்பதனை-எண்ணத்தை. அது:பகுதிப் பொருள் விகுதி. முடிக்கின்றோம்.நிறைவேற்றித் தருகின்றோம். என்று-என திருவாய் மலர்ந்தருளிச் செய்து விட்டு. அவர்தம்-அந்தத் திருநாவுக்கரசு நாயனாருடைய. தம்:அசை நிலை. சென்னி - 'மிசை-தலையின் மேல். சிவ்பெருமான்-சிவபெருமானாகிய அந்தக் கலியாணசுந்தரேசுவரன். பாத-தன்னுடைய திருவடி களாகிய, ஒருமை பன்மை மயக்கம். மலர்-செந்தாமரை கமலர்களை ஒருமை பன்மை மயக்கம். சூட்டினான்.வைத் - தருளினான்.

திருநல்லூர்: இது சோழ நாட்டில் உள் ள சி வ த் தலம். இங்கே கோயில் கொண்டிருப்பவருடைய திருநாமங் கள் பெரியாண்டேசுவரர், கலியான சுந்தரேசுவரர் என்பவை. அம்பிகையினுடைய திருநாமங்கள் திரிபுரசுந்தரி யம்மை, கவியான சுந்தரி என்பவை. இந்தத் தலம் சுந்தரப் பெருமாள் கோயில் என்னும் ஊரிலிருந்து இரண்டு மைல் துாரத்தில் உள்ளது. கலியான சுந்தரேசுவரர் திருநாவுக்க்ரசு நாயனாருக்குத் தம்முடைய திருவடிகளை அவருடைய தலையின்மேல் வைத்தருளிய தலம் இது. - . . இதைப் பற்றித் திருநாவுக்கரசு நாயனார் பாடியருளிய ஆபாசுரப் பகுதிகள் வருமாறு: - . . 3 * * . . . . “. . ..: : : к

தி-23