பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/359

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

258 பெரிய புராண விளக்கம்-6.

  • வடபாற் கயிலையும் தென்பால் நல்லூரும்

தம்வாழ்பதியே’’ - ".... நல்லூருறை நம்பனை நானொருகாற் றுஞ்சிடைக் கண்டு கனவின்

தலைத்தொழு தேற்க வன்றான் நெஞ்சிடை நின்றக லான் பல காலமும் நின்றனனே.” கநல்லருளால் திருவடியென் தலைமேல் வைத்தார் நல்லூரெம் பெருமானார் நல்ல வாறே.' - சிவபெருமானுடைய அடியவர்களுக்கு கந்தைத் துணி களையும், ஆடை எளிலிருந்து கிழித்த கெள பீனங்களையும் வழங்கி வந்த அமர் நீதி நாயனாரைக் கலியான சுந்தரேசு வரர் தடுத்து ஆட்கெர்ண்டு அந்த அமர் நீதி நாயனாருக்கும் அவருடைய பத்தினியாருக்கும் புதல்வனுக்கும் முத்தியை வழங்கியருளிய தலம் இது. இந்தச் செய்தியைத் திருநாவுக் கரசு நாயனார் பாடியருளிய திருநல்லூர்த் திருவிருத்தத்தில் ஏழாவது திருவிருத்தத்தில் பின் வருமாறு பாடியருளியுள் ளார். . . -

'நாட்கொண்ட தாமரைப் பூந்தடம்

சூழ்ந்தநல்லூரகத்தே கீட்கொண்ட கோவணம் காவென்று.

சொல்லிக் கிறிபடத் தான் வாட்கொண்ட நோக்கி மனைவி யொடுமங் கொர் வாணிகனை ஆட்கொண்ட வார்த்தை உரைக்குமன் றோஇவ் வகவிடமே." - . . . . . . . கலியான சுந்தரேசுவரருடைய சந்நிதி ஒரு மலையைப் போல உயரமான இடத்தில் உள்ளது. ஆலயத்துக்கு எதிரில் சப்தசாகரதிர்த்தம் என்னும் பெரிய தீர்த்தம் உள்ளது. கலி - யாண சுந்தரேசுவரர் - தங்கவண்ணத்தோடு விளங்குகிறார். .