பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/360

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் 259

அவர் ஒரு நாளைக்கு ஐந்து வர்ணங்களை உடையவராகக் காட்சியளிக்கிறார் என்று ஆன்றோர் கூறுவர். சிவலிங்கப் பெருமானிடத்தில் சில துளைகள் காணப்படுகின்றன. அகத்திய முனிவருக்கு திருமணக் காட்சியைக் கலியாண சுந்தரேசுவரர் வழங்கியருளிய தலம் இது. இந்தத் திருக் கோயிலில் சாளக் கிராமச்சிலையினாற் செய்த முருகப் பெருமானுடைய விக்கிரகம் இருக்கிறது. அ. க. ஸ் தி ய ர் பிரதிஷ்டை செய்த அகஸ்தியலிங்கம் இந்தக் கலியாண சுந்த ரேசுவரருக்கு அருகில் உள்ளது. இந்தத் தலத்தில் சப்த ஸ்தானத் திருவிழா நடந்து வருகிறது. இந்தத் தலத்தைப் பற்றிய ஒரு பாசுரம் வருமாறு: -

பொன்வைத்த நறுங்கொன்றை சடைமேல் வைத்தார்; புலியுரியின் அதன் வைத்தார்; புனலும் வைத்தார்; மன்வைத்த திரள்தோள்மேல் மழுவாள் வைத்தார்; வார்காதிற் குழைவைத்தார்; மதியம் வைத்தார்; மின்னலத்த நுண்ணிடையாள் பாகம் வைத்தார்; - வேழத்தின் உரிவைத்தார்; வெண்ணுரல் வைத்தார்; நன்னலத்த திருவடியென் தலைமேல் வைத்தார்

நல்லூரெம் பெருமானார் நல்ல வாறே.' இது திருநாவுக்கரசு நாயனார் பாடியருளிய ஒரு திருத் தாண்டகம். . . . - - பிறகு உள்ள 196-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு: - நனைந்தனைய தி ரு வ டி யெ ன் த ைல மே ல் வைத்தார்' எனத் தொடங்கி அந்தத் திருநாவுக்கரசு நாய

னார் தாம் பாடியருளிக் கலியாணசுந்தரேசுவரருக்கு

அணிந்த ஒரு திருத்தாண்டகத்தால் அந்த ஈசுவரருக்கு வாழ்த்துக்களைத் திருவாய் மலர்ந்தருளிச் செய்துவிட்டு அந்தப் பரிசுத்தராகிய கலியான சுந்தரேசுவரர் தமக்கு வழங்கிய திருவருளை எண்ணித் தம்முடைய திருவுள்ளத்தில் பக்தியினால் உருக்கத்தை அடைந்து தரையில் விழுந்து அந்த