பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/362

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் 261,

மயக்கம். பெரிதும்-மிகவும். பெற்று-அடைந்து. உவந்தமகிழ்ச்சியை அடைந்த, வறியோன்போல்-தரித்திரனைப் போல. மனம்-தம்முடைய திருவுள்ளத்தில். தழைத்தார்அந்த நாயனார் ஆனந்தம் தழைத்திருந்தார். 'நனைந் தனைய திருவடி என் தலைமேல் வைத்தார்’ என்ற சொற்றொடர் வரும் திருத்தாண்டகத்தை முன்பே காட்டி. விருக்கிறோம்; ஆண்டுக் கண்டுணர்க.

அந்த நாயனார் பாடியருளிய ஒரு திருவிருத்தம் வருமாறு:

அட்டுமின் இல்பலி என்றென் றகங்கடை தோறும் வந்து மட்டவி ழுங்குழ லார்வளை

கொள்ளும் வகையென் கொலோ கொட்டிய பாணி எடுத்திட்ட

பாதமும் கோ ளரவும் நட்டம் நின் றாடிய நாதர்நல் - லுரரிடம் கொண் டவரே." - பிறகு வரும் 197-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு: அந்தத் திருநாவுக்கரசு நாயனார் திருநல்லூரில் திருக் கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் நம்பராகிய கலியான சுந்தரேசுவரரிடத்தில் தமக்குப் பொருந்தியுள்ள உழவாரத் திருப்பணியையும், பிற பணிகளையும் அ ைம யு மாறு ஒவ்வொரு நாளும் புரிந்துகொண்டு, பாசுரங்களாக அமைந்த செந்தமிழ் மொழியில் அமைந்த மாலைகளாகிய திருப் பதிகங்கள் பலவற்றை அந்த நாயனார் பாடியருளி அந்தக் கலியாணசுந்தரேசுவரரை வணங்கித் துதித்துவிட்டுத். தெய்வத் தன்மையைப் பெற்ற திருத்தொண்டுகளைப் புரிந்து கொண்டு வாழ்ந்து வரும் காலத்தில். பாடல் வருமாறு:

நாவுக்கு மன்னர்திரு கல்லூரில் கம்பர்பால் மேவுற்ற திருப்பணிகள் மேவுறநாளும்செய்து