பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/363

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரிய புராண விளக்கம்- 6

பாவுற்ற தமிழ்மாலை பலபாடிப் பணிந்தேத்தித்

தேவுற்ற திருத்தொண்டு செய்தொழுகிச் செல்லும்நாள்.'

இந்தப் பாடல் குளகம். நாவுக்கு மன்னர்-அந்தத் திருநாவுக்கரசு நாய னார். திருநல்லூரில்-திருநல்லூரில் கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும். நம்பர் பால்-தம் முடைய அடியவர்களுக்குப் பலவகையாகிய நம்பிக்கைகளை உண்டாக்குபவராகிய கலியாண சுந்தரேசுவரரிடத்தில். அந்த நம்பிக்கைகள் இன்ன என்பதை வேறோரிடத்தில் கூறினோம்; ஆண்டுக் கண்டுணர்க. மேவுற்ற-தமக்குப் .ொருத்தமாக உள்ள. திருப்பணிகள்-உழவாரத் திருப்பணி யையும் பிற பணிகளையும். உழவாரத் திருப்பணியாவது திருக்கோயிற் பிரகாரங்களில் பிரதட்சிணம் செய்யும் பக்தர் களினுடைய் திருவடிகளில் உறுத்தாமல் இருக்கும் பொருட்டு வழியில் உள்ள புல்லைச் செதுக்கி எறிந்தும் மண்ணையும் கற்களையும் ஒதுக்கிவிட்டுப் பணிகளைச் செய்தல். பிறபணி களாவன பக்தர்களை இறைவனுடைய ச ந் நி தி க் கு அழைத்துச் சென்று தரிசனம் செய்து வைத்தல் முதலியவை.

மேவுற-அமையுமாறு. நாளும்-ஒவ்வொரு நாளும். செய்து

அந்த நாயனார் புரிந்து கொண்டு. பா-பாசுரங்களாக; 'ஒருமை பன்மை மயக்கம். உற்ற-அமையப் பெற்ற. தமிழ்செந்தமிழ் மொழியில் அமைந்த. மாலை-மாலைகளாகிய திருப்பதிகங்கள்: ஒருமை பன்மை மயக்கம். பல-பலவற்றை, பாடி-பாடியருளி. ப்:சந்தி. பணிந்து-அந்தக் கலியான சுந்தரேசுவரரை வணங்கி. ஏத்தி-துதித்துவிட்டு. த்:சந்தி. தேவுற்ற-தெய்வத் தன்மையைப் பெற்ற, திருத் தொண்டு. பல திருத்தொண்டுகளை ஒருமை பன்மை மயக்கம். செய்துபுரிந்துகொண்டு. ஒழுகி-வாழ்ந்து, ச்:சந்தி. செல்லும்வாழ்ந்து வரும்: தம்முடைய வாழ்க்கையை நடத்தும். நாள்காலத்தில், х . - -

திருநாவுக்கரசு நாயனார் திருநல்லூரைப் பற்றிப் பாடி . . . . யருளிய ஒரு திருவிருத்தம் வருமாறு: