பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/364

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் 263

செஞ்சுடர்ச் சோதிப் பவளத் திரள் திகழ் முத்தனைய நஞ்சணிதண் டன் நல் லூருறை நம்பனை நானொருகால் துஞ்சிடைக் கண்டுகவிைன் தலைத்தொழு தேற்க - - - வன்றான் நெஞ்சிடை நின்றக லான் பல காலமும் நின்றனனே.” இந்தத் தலத்தைப் பற்றி அந்த நாயனார் பாடியருளிய ஒரு திருத்தாண்டகம் வருமாறு: -

சென்றுருளும் கதிரிரண்டும் விசும்பில் வைத்தார்; திசைபத்தும் இருநிலத்தில் திருந்த வைத்தார்; நின்றருளி அடிஅமரர் வணங்க வைத்தார்;

நிறைதவமும் மறைபொருளும் நிலவ வைத்தார்; கொன்றருளிக் கொடுங்கூற்றம் நடுங்கி ஒடக் - குரைகழற்சே வடிவைத்தார்; விடையும் வைத்தார்; நன்றருளும் திருவடிஎன் தலைமேல் வைத்தார் நல்லூரெம் பெருமானார் நல்ல வாறே.' பிறகு உள்ள 198-ஆம் கவியின் கருத்து வருமாறு: 'திருக்கருகாவூர் முதலாக உள்ள நெற்றியில் ஒற்றைக் கண்ணைப் பெற்றவனாகிய பசுபதீசுவரன் திருக்கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் திருவாவூருக்கும், திருப் பாலைத் துறைக்கும், மற்ற சிவத்தலங்களுக்கும் அந்தத் திருநாவுக்கரசு நாயனார் எழுந்தருளி முல்லைவனேசுவர ரையும், பசுபதீசுவரரையும், பாலைவன நாதேசுவரன்ரயும் வணங்கிவிட்டுத் தம்முடைய திருவுள்ளத்தில் பெருகி எழுந்த பேராவலால் அந்தச் சிவத்தலங்களில் திருத்தொண்டுகளை அந்த நாயனார் புரிந்துவிட்டு பெருமையைப் பெற்ற திருநல் லுனருக்கு எழுந்தருளி ஒரு சமயமும் அந்தத் திரு நல்லூரை விட்டுப் பிரியாமல் தம்முடைய திருவுள்ளத்தில் உருக்கத்தை அடைந்து அந்தச் சிவபெரு மான்களை வணங்குகிறவரானார். •. புரட்டில் வருமாறு: - --- . .