பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/365

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

264 - பெரிய புராண விளக்கம்.ட6

' கருகாவூர் முதலாகக்

கண்ணுதலோன் அமர்ந்தருளும் திருவாவூர் திருப்பாலைத்

துறையிறவும் சென்றிறைஞ்சிப் பெருகார்வத் திருத்தொண்டு செய்துபெரும் திருகல்லூர் ஒருகாலும் பிரியாதே

உள்ளுருகிப் பணிகின்றார்.' கருகாவூர்-திருக்கருகாவூர். முதலாக-முதலாக உள்ள. க்:சந்தி. கண்ணுதலோன்-நெற்றியில் ஒற்றைக் கண்னைப் பெற்றவனாகிய பசுபதீசுவரன். அமர்ந்தருளும்-திருக் கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும். திருவாவூர்-திருவா ஆருக்கும். திருப்பாலைத்துறை-திருப்பாலைத்துறைக்கும். பிறவும்.வேறு சிவத்தலங்களுக்கும். சென்று-அந்தத் திரு. நாவுக்கரசு நாயனார் எழுந்தருளி. இறைஞ்சி-முல்லை வனேசுவரரையும், பசுபதீசுவரரையும், பாலைவன் நாதே. சுவரரையும், வேறு பல சிவத்தலங்களில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் சிவபெருமான்களையும். வணங்கி விட்டு. ப்:சந்தி. பெருகு-தம்முடைய திருவுள்ளத் தில் பெருகி எழுந்த. ஆர்வ-பேராவலினால், த்:சந்தி. திருத். தொண்டு. அந்தச் சிவத்தலங்களில் உழவாரத் தொண்டினை, யும் வேறு பல திருத் தொண்டுகளையும்; ஒருமை பன்மை மயக்கம். செய்து-புரிந்து விட்டு. பெரும்-பெருமையைப் பெற்று விளங்கும். திருநல்லூர்-திருநல்லூருக்கு அந்த நாய, னார் எழுந்தருளி. ஒருகாலும்-ஒரு சமயத்திலும். பிரியாதுஅந்தத் திருநல்லூரை விட்டுப் பிரியாமல், ஏ:அசை நிலை. உள்-தம்முடையதிருவுள்ளத்தில், உருகி-பக்தியினால். உருக்' கத்தை அடைந்து. ப்:சந்தி. பணிகின்றார்-அந்தச் சிவ. பெருமான்களை வணங்குகிறவரானார். -- . * * . . . . திருக்கருகாவூர்: இது சோழ நாட்டில் உள்ள சிவத்தலம். இங்கே கோயில் கொண்டிருப்பவர் முல்லைவனேசுவரர்.