பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/366

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் 265.

அம்பிகை கரும்பனையாளம்மை. கர்ப்பரட்சகியம்மை. என்ற திருநாமமும் உண்டு. தல விருட்சம் முல்லைக்கொடி. இது திருக்களாவூர் என வழங்கும். இது ஐயம்பேட்டை என்னும் ஊரிலிருந்து தென்கிழக்குத் திசையில் நான்கு மைல் தூரத்தில் உள்ளது. இது வெட்டாற்றின் தென்கரையில் உள்ளது. விநாயகப் பெருமானுடைய திருநாமம் கற்பக விநாயகர் என்பது. முருகக் கடவுளின் திருவுருவம் ஆறு முகங்களோடு விளங்குகிறது. கரும்பனையாளம்மை ஆதரவற்ற ஒரு பெண்மணிக்கு மருத்துவம் பார்த்து அவள் கருப்பத்தைக் காத்தபடியால் இந்தத் தலத்திற்குத் திருக் கருகாவூர் என்னும் பெயரும், அம்பிகைக்கு கர்ப்பரட்சகி" என்னும் திருநாமமும் உண்டாயின. அம்பிகையின் சந்நிதி தனியாக உள்ளது. சிவலிங்கப் பெருமானார் மன லால் ஆனவர். சந்திரன் வழிபட்ட தலம் இது. இதைப் பற்றித் திருநாவுக்கரசு நாயனார் பாடியருளிய ஒரு திருத்தாண்ட கம் வருமாறு: -

' குருகாம்; வயிரமாம்; கூறும் நாளாம்;

கொள்ளும் கிழமையாம்; கோளே தானாம்; பருகா அமிர்தமாம்; பாவில் நெய்யாம்;

பழத்தின் இரதமாம்; பாட்டிற் பண்ணாம்: ஒருகால் உமையாளோர் பாக னும்ஆம்: உள்நின்ற நாவுக் குரையா டியாம்; கருவாய் உலகுக்கு முன்னே தோன்றும் கண்ணாம் கருகாவூர் எந்தை தானே. இந்தத் தல்த்தைப் பற்றித் திருஞான சம்பந்த மூர்த்தி தாயனார் கெளசிகப் பண்ணில் பாடியருளிய ஒரு பாசுரம் வருமாறு:

1 முத்தி லங்குமுறு வல்உமை அஞ்சவே

மத்த யானைமறு கவ்வுரி வாங்கி அக் கத்தை போர்த்த கடவுள் கருகாவூர்எம் - அத்தர் வண்ணம் சுழலும்கழல் வண்ணமே, '

3 *