பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/367

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

266 - பெரிய புராண விளக்கம்-6

திரு ஆவூர் : இது சோழ நாட்டில் உள்ள சிவத்தலம். இங்கே கோயில் கொண்டிருப்பவர் பசுபதீசுவரர். அம்பிகை மங்கள நாயகி. தீர்த்தம் பிரம தீர்த்தம். இது பட்டீச்சுரத் திற்குத் தென் மேற்குத் திசையில் நாலரை மைல் தூரத் தில் உள்ளது. இந்தத் தலத்தில் விளங்கும் திருக்கோயிலுக் குப் பசுபதீச்சுரம் என்று பெயர். இது பகமாடுகள் வழிபட்ட தலம். இந்தத் தலத்தைப் பற்றி நட்டபாடைப் பண்ணில் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் பாடியருளிய ஒரு பாசுரம் வருமாறு: x

புண்ணியர் பூதியர் பூத நாதர்

புடைபடு வார்தம் மனத்தார் திங்கட் கண்ணியர் என்றென்று காத லாளர் கைதொழு தேத்த இருந்த ஊராம் விண்ணுயர் மாளிகை மாட வீதி

விரைகமழ் சோலை சுலாவி எங்கும் பண்ணியல் பாடல் அறாத ஆவூர்ப்

பசுபதி யீச்சரம் பாடு நாவே. * > * - திரு ஆவுரைப் பற்றித் திருநாவுக்கரசு நாயனார் பாடி யருளிய திருப்பதிகம் இப்போது கிடைக்கவில்லை. மறைந்த திருப்பதிகங்களில் அதுவும் ஒன்றாக இருக்கும் போலும் !

திருப்பாலைத் துறை: இது சோழ நாட்டில் காவிரி யாற்றின் தென்கரையில் உள்ள சிவத்தலம். இங்கே கோயில் கொண்டிருப்பவர் பாலைவன நாதேசுவரர். அம்பிகை தவள வெண்ணகை அம்மை. இது பாபநாசத்துக்கு வடகிழக்குத் திசையில் ஒரு மைல் தூரத்தில் உள்ளது. பாலைவன நாதே சுவரர் தாருகாவனத்து முனிவர்கள் தம்மைக் கொல்லும் பொருட்டு அனுப்பிய புவியிலுடைய - தோலை, உரித்து அதனைப் போர்வையாகப் போ:த்துக் கொண்டருளியதலம். இது. அம்பிகையின் சந்நிதி தனியாகத் தென்பக்கம் உள்ளது. இந்தத் தலத்தைப் பற்றித் திருநாவுக்கரசு நாயனார் பாடி யருளிய ஒரு திருக்குறுந் தொகை வருமாறு: